அப்போஸ்தலருடைய நடபடிகள் 19
Tamil Bible (BSI 1957) • 41 verses
1அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:23-28 · I கொரிந்தியர் 16:12 · I கொரிந்தியர் 1:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:19-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:1 · I கொரிந்தியர் 3:4-7
2நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
RelatedI கொரிந்தியர் 6:19 · கலாத்தியர் 3:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:15-17 · யோவான் 7:39 · I சாமுவேல் 3:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:5
3அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25 · மத்தேயு 3:1-17 · மத்தேயு 28:19 · I கொரிந்தியர் 12:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:16 · லூக்கா 3:1-38
4அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:16 · யோவான் 1:29-34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:5 · லூக்கா 3:16-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:23-25 · யோவான் 3:28-36
5அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · I கொரிந்தியர் 10:2 · ரோமர் 6:3-4 · I கொரிந்தியர் 1:13-15
6அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 · மாற்கு 16:17 · I தீமோத்தேயு 5:22 · I கொரிந்தியர் 14:1-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17
7அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
8பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20-22 · யூதா 1:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14
9சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:4 · II பேதுரு 2:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4
10இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:31 · II தீமோத்தேயு 1:15 · ரோமர் 10:18 · ரோமர் 10:12 · ரோமர் 1:16 · கொலோசெயர் 3:11
11பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.
Relatedமாற்கு 16:17-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:12 · ரோமர் 15:18-19 · எபிரெயர் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13 · கலாத்தியர் 3:5
12அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
13அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
Relatedமத்தேயு 12:27 · மாற்கு 9:38 · லூக்கா 11:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18-19 · லூக்கா 9:49 · மாற்கு 5:7
14பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
15பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17-18 · லூக்கா 4:33-35 · மாற்கு 5:9-13 · மாற்கு 1:34 · மாற்கு 1:24 · லூக்கா 8:28-32
16பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
17இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
RelatedII தெசலோனிக்கேயர் 1:12 · பிலிப்பியர் 1:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5 · பிலிப்பியர் 2:9-11 · II தெசலோனிக்கேயர் 3:1
18விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
19மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:8 · ஏசாயா 2:20-21 · யாத்திராகமம் 32:20 · ஆதியாகமம் 35:4 · உபாகமம் 7:25-26 · தானியேல் 2:2
20இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · ஏசாயா 55:11 · II தெசலோனிக்கேயர் 3:1
21இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11 · கலாத்தியர் 2:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21 · ரோமர் 1:13
22தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
Relatedரோமர் 16:23 · II தீமோத்தேயு 4:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5
23அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:14 · II கொரிந்தியர் 1:8-10 · II கொரிந்தியர் 6:9
24எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
RelatedI தீமோத்தேயு 6:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:27-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:34-35 · ஏசாயா 56:11-12
25இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
Relatedஓசியா 12:7-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:19 · ஓசியா 4:8 · II பேதுரு 2:3 · வெளிப்படுத்தின விசேஷம் 18:11-19 · வெளிப்படுத்தின விசேஷம் 18:3
26இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
RelatedI கொரிந்தியர் 8:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29 · ஏசாயா 44:10-20 · உபாகமம் 4:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:10
27இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.
Relatedசெப்பனியா 2:11 · I தீமோத்தேயு 6:5 · வெளிப்படுத்தின விசேஷம் 13:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · மத்தேயு 23:13
28அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:13 · வெளிப்படுத்தின விசேஷம் 13:4 · வெளிப்படுத்தின விசேஷம் 12:12 · சங்கீதம் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 · I இராஜாக்கள் 18:26-29
29பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4 · பிலேமோன் 1:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:2 · கொலோசெயர் 4:10 · I கொரிந்தியர் 1:14 · I கொரிந்தியர் 4:9
30பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39 · II சாமுவேல் 21:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:22-31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14-18 · II சாமுவேல் 18:2-3
31ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:10 · நீதிமொழிகள் 16:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6
32கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:34 · லூக்கா 7:24-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:40 · மத்தேயு 11:7-9
33அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17 · I தீமோத்தேயு 1:20 · II தீமோத்தேயு 4:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:10 · லூக்கா 1:22 · பிலிப்பியர் 1:7
34அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:28 · மத்தேயு 6:7 · வெளிப்படுத்தின விசேஷம் 13:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26 · I இராஜாக்கள் 18:26
35பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
RelatedII தெசலோனிக்கேயர் 2:10-11 · எபேசியர் 2:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12-13 · I தீமோத்தேயு 4:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26
36இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும்.
37இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
38தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:14 · I கொரிந்தியர் 6:1 · உபாகமம் 17:8
39நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
40இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:38 · மத்தேயு 26:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:31 · I இராஜாக்கள் 1:41 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:5-8
41பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS