அப்போஸ்தலருடைய நடபடிகள் 15
Tamil Bible (BSI 1957) • 41 verses
1சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.
Relatedகலாத்தியர் 5:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:5 · கொலோசெயர் 2:8 · கலாத்தியர் 2:11-14 · I கொரிந்தியர் 7:18-19 · லேவியராகமம் 12:3
2அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:6-7 · கலாத்தியர் 2:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:30 · கலாத்தியர் 2:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:4
3அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:12 · ரோமர் 15:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:18-19 · I கொரிந்தியர் 16:11
4அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:3 · ரோமர் 15:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:17 · II கொரிந்தியர் 6:1
5அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
Relatedகலாத்தியர் 5:1-3 · பிலிப்பியர் 3:5-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5-6
6அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
Relatedநீதிமொழிகள் 15:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:25 · எபிரெயர் 13:7 · எபிரெயர் 13:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:18
7மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
Relatedகலாத்தியர் 2:7-9 · ரோமர் 10:17-18 · I நாளாகமம் 28:4-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:32-48
8இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:47 · எபிரெயர் 4:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 · எரேமியா 17:10
9விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
Relatedஎபேசியர் 3:6 · ரோமர் 3:22 · கலாத்தியர் 5:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:28 · I கொரிந்தியர் 1:2 · கொலோசெயர் 3:11
10இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
Relatedகலாத்தியர் 5:1 · மத்தேயு 23:4 · கலாத்தியர் 4:9 · எபிரெயர் 9:9 · மத்தேயு 11:28-30 · மத்தேயு 4:7
11கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
Relatedரோமர் 3:24 · தீத்து 3:4-7 · எபேசியர் 2:5-9 · தீத்து 2:11 · கலாத்தியர் 2:16 · II கொரிந்தியர் 13:14
12அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:4 · யோவான் 4:48 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19
13அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17 · கலாத்தியர் 2:9 · கலாத்தியர் 2:12 · யாக்கோபு 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:29
14தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குச் கடாட்சித்தருளினவிதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
RelatedII பேதுரு 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:7-9 · லூக்கா 2:31-32 · I பேதுரு 2:9-10 · ஏசாயா 43:21 · ரோமர் 1:5
15அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
16எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
Relatedஆமோஸ் 9:11-12 · லூக்கா 1:31-33 · சங்கீதம் 89:35-49 · எசேக்கியேல் 17:22-24 · ஏசாயா 9:6-7 · எரேமியா 12:15
17நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
18உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
Relatedஎபேசியர் 1:4 · எபேசியர் 3:9 · ஏசாயா 46:9-10 · I பேதுரு 1:20 · எபேசியர் 1:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26
19ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28 · கலாத்தியர் 1:7-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24 · I தெசலோனிக்கேயர் 1:9 · ஏசாயா 55:7 · ஓசியா 14:2
20விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:29 · வெளிப்படுத்தின விசேஷம் 2:20 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14 · லேவியராகமம் 3:17 · ஆதியாகமம் 9:4 · I கொரிந்தியர் 8:4-13
21மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:27 · II கொரிந்தியர் 3:14-15 · லூக்கா 4:16 · நெகேமியா 8:1-12
22அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:40 · I பேதுரு 5:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5 · I தெசலோனிக்கேயர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:23
23இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:26 · கலாத்தியர் 1:21 · யாக்கோபு 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22 · ரோமர் 16:3-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27
24எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
Relatedகலாத்தியர் 5:12 · கலாத்தியர் 5:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · கலாத்தியர் 1:7 · தீத்து 1:10-11 · கலாத்தியர் 6:12-13
25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22 · லூக்கா 1:3 · II பேதுரு 3:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:2 · ரோமர் 16:12
26எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:23-25 · பிலிப்பியர் 2:29-30 · I கொரிந்தியர் 15:30 · II கொரிந்தியர் 11:23-27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50
27அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22 · III யோவான் 1:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32 · II யோவான் 1:12
28எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
Relatedமத்தேயு 11:30 · யோவான் 16:13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:24 · I பேதுரு 1:12 · I கொரிந்தியர் 14:37 · I கொரிந்தியர் 7:40
29அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:25 · வெளிப்படுத்தின விசேஷம் 2:20 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14 · லேவியராகமம் 17:14 · I கொரிந்தியர் 10:18-20
30அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:33
31அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
Relatedகலாத்தியர் 2:4-5 · கலாத்தியர் 5:1 · பிலிப்பியர் 3:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:5
32யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1 · I பேதுரு 5:1 · I கொரிந்தியர் 14:3 · I தெசலோனிக்கேயர் 5:14
33சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
RelatedI கொரிந்தியர் 16:11 · எபிரெயர் 11:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:36 · ஆதியாகமம் 26:29 · யாத்திராகமம் 4:18 · மாற்கு 5:34
34ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது.
35பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
RelatedII தீமோத்தேயு 4:2 · கொலோசெயர் 1:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1 · மத்தேயு 28:19-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31
36சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:24-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:13-14 · II கொரிந்தியர் 11:28
37அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5 · II தீமோத்தேயு 4:11 · கொலோசெயர் 4:10 · பிலேமோன் 1:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25
38பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:13 · யாக்கோபு 1:8 · நீதிமொழிகள் 25:19 · லூக்கா 14:27-34 · சங்கீதம் 78:9 · லூக்கா 9:61
39இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
Relatedகொலோசெயர் 4:10 · யாக்கோபு 3:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36 · பிரசங்கி 7:20 · ரோமர் 7:18-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:4-12
40பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 · I கொரிந்தியர் 15:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32
41சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS