II இராஜாக்கள் 5
Tamil Bible (BSI 1957) • 27 verses
1சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
Relatedலூக்கா 4:27 · ரோமர் 15:18 · நீதிமொழிகள் 21:31 · எஸ்தர் 9:4 · உபாகமம் 2:37 · எண்ணாகமம் 12:10-12
2சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
RelatedII இராஜாக்கள் 6:23 · II இராஜாக்கள் 13:20 · சங்கீதம் 123:2 · I சாமுவேல் 13:17-18 · நியாயாதிபதிகள் 9:34
3அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:29 · லூக்கா 17:12-14 · எண்ணாகமம் 11:29 · மத்தேயு 11:5 · II இராஜாக்கள் 5:8 · I கொரிந்தியர் 4:8
4அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்.
RelatedI கொரிந்தியர் 1:26-27 · யோவான் 4:28-29 · யோவான் 1:42-46 · II இராஜாக்கள் 7:9-11 · மாற்கு 5:19 · மாற்கு 16:9-10
5அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத்தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,
Relatedநியாயாதிபதிகள் 14:12 · II இராஜாக்கள் 8:8-9 · ஆதியாகமம் 11:7 · யாக்கோபு 5:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18-20 · I சாமுவேல் 9:7-8
6இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.
7இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
RelatedI சாமுவேல் 2:6 · I இராஜாக்கள் 20:7 · ஆதியாகமம் 30:2 · உபாகமம் 32:39 · தானியேல் 2:11 · ஓசியா 6:1
8இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.
RelatedI இராஜாக்கள் 18:36-37 · யாத்திராகமம் 11:8 · II இராஜாக்கள் 5:3 · ரோமர் 11:13 · II சாமுவேல் 3:31 · I இராஜாக்கள் 17:24
9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.
RelatedII இராஜாக்கள் 6:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:29-30 · II இராஜாக்கள் 3:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37-39 · ஏசாயா 60:14
10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
Relatedயோவான் 9:7 · லேவியராகமம் 14:7 · I கொரிந்தியர் 6:11 · மத்தேயு 15:23-26 · யோசுவா 6:4 · யோசுவா 6:13-16
11அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.
Relatedநீதிமொழிகள் 1:32 · நீதிமொழிகள் 13:10 · I கொரிந்தியர் 1:21-25 · ஏசாயா 55:8-9 · மத்தேயு 8:8 · எபிரெயர் 12:25
12நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.
Relatedமாற்கு 1:9 · எசேக்கியேல் 47:1-8 · II இராஜாக்கள் 2:14 · நீதிமொழிகள் 19:11 · சகரியா 13:1 · II இராஜாக்கள் 2:8
13அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
RelatedII இராஜாக்கள் 6:21 · II இராஜாக்கள் 13:14 · II இராஜாக்கள் 2:12 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · யோபு 32:8-9 · I பேதுரு 3:21
14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
15அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
Relatedதானியேல் 2:47 · தானியேல் 6:26-27 · யோசுவா 2:9-11 · II இராஜாக்கள் 5:8 · ஏசாயா 44:6 · I இராஜாக்கள் 18:36
16அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.
RelatedII இராஜாக்கள் 5:20 · II இராஜாக்கள் 3:14 · II இராஜாக்கள் 5:26 · I இராஜாக்கள் 17:1 · ஆதியாகமம் 14:22-23 · I இராஜாக்கள் 13:8
17அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · ரோமர் 14:1 · யாத்திராகமம் 20:24 · I பேதுரு 4:3 · II இராஜாக்கள் 5:12 · I தெசலோனிக்கேயர் 1:9
18ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.
RelatedII இராஜாக்கள் 7:2 · II இராஜாக்கள் 7:17 · எரேமியா 50:20 · II இராஜாக்கள் 17:35 · யாத்திராகமம் 20:5 · II நாளாகமம் 30:18-19
19அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
RelatedI சாமுவேல் 1:17 · மாற்கு 5:34 · யாத்திராகமம் 4:18 · லூக்கா 7:50 · எபிரெயர் 5:13-14 · மத்தேயு 9:16-17
20தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
RelatedII இராஜாக்கள் 4:12 · II இராஜாக்கள் 4:36 · தீத்து 1:7 · II இராஜாக்கள் 4:31 · II இராஜாக்கள் 6:31 · II பேதுரு 2:14-15
21நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
Relatedலூக்கா 7:6-7 · II இராஜாக்கள் 4:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25-26 · II இராஜாக்கள் 9:17-22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:31
22அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
RelatedII இராஜாக்கள் 5:5 · எரேமியா 9:5 · யோவான் 8:44 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3-4 · II கொரிந்தியர் 12:16-18
23அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுவஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்.
Relatedஏசாயா 30:6 · II இராஜாக்கள் 5:16 · I இராஜாக்கள் 20:7 · லூக்கா 11:54 · II இராஜாக்கள் 2:17 · II இராஜாக்கள் 12:10
24அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.
25பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
RelatedII இராஜாக்கள் 5:22 · ஆதியாகமம் 16:8 · மத்தேயு 26:21 · யோவான் 13:26-30 · மத்தேயு 26:15-16 · ஆதியாகமம் 3:8-9
26அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
Relatedகொலோசெயர் 2:5 · I கொரிந்தியர் 5:3 · II இராஜாக்கள் 6:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 · I கொரிந்தியர் 9:11-12 · II இராஜாக்கள் 5:16
27ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.
📖 II இராஜாக்கள்All 25 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS