யாத்திராகமம் 20
Tamil Bible (BSI 1957) • 26 verses
1தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
Relatedஉபாகமம் 5:22 · உபாகமம் 5:4 · உபாகமம் 4:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38 · உபாகமம் 4:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:53
2உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
Relatedஉபாகமம் 5:6 · ஓசியா 13:4 · சங்கீதம் 81:10 · லேவியராகமம் 26:13 · யாத்திராகமம் 13:3 · லேவியராகமம் 19:36
3என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
Relatedஉபாகமம் 5:8 · லேவியராகமம் 26:1 · உபாகமம் 4:15-19 · சங்கீதம் 97:7 · லேவியராகமம் 19:4 · உபாகமம் 27:15
5நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
Relatedஉபாகமம் 5:9 · எண்ணாகமம் 14:18 · உபாகமம் 4:24 · யாத்திராகமம் 34:14 · யோசுவா 24:19 · உபாகமம் 6:15
6என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
Relatedஉபாகமம் 7:9 · யோவான் 14:21 · I யோவான் 5:3 · எரேமியா 32:39-40 · உபாகமம் 5:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39
7உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
Relatedஉபாகமம் 5:11 · லேவியராகமம் 19:12 · யாக்கோபு 5:12 · மத்தேயு 5:33-37 · சங்கீதம் 50:14-16 · எரேமியா 4:2
8ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
Relatedலேவியராகமம் 26:2 · லேவியராகமம் 19:3 · ஆதியாகமம் 2:3 · யாத்திராகமம் 31:13-16 · லேவியராகமம் 23:3 · லேவியராகமம் 19:30
9ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Relatedலூக்கா 13:14 · யாத்திராகமம் 23:12 · யாத்திராகமம் 34:21 · லேவியராகமம் 23:3 · யாத்திராகமம் 35:2
10ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Relatedஉபாகமம் 5:14-15 · யாத்திராகமம் 34:21 · யாத்திராகமம் 16:27-28 · எண்ணாகமம் 15:32-36 · உபாகமம் 24:14-22 · லூக்கா 23:56
11கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
Relatedஆதியாகமம் 1:1-2 · ஆதியாகமம் 2:2-3 · யாத்திராகமம் 31:17 · மாற்கு 2:27-28 · சங்கீதம் 95:4-7 · ஆதியாகமம் 1:28
12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
Relatedஎபேசியர் 6:1-3 · கொலோசெயர் 3:20 · உபாகமம் 5:16 · மாற்கு 7:10 · நீதிமொழிகள் 23:22-25 · லேவியராகமம் 19:3
13கொலை செய்யாதிருப்பாயாக.
Relatedரோமர் 13:9 · உபாகமம் 5:17 · ஆதியாகமம் 9:5-6 · மத்தேயு 5:21-22 · யாத்திராகமம் 21:14 · மத்தேயு 19:18
14விபசாரம் செய்யாதிருப்பாயாக.
Relatedஎபிரெயர் 13:4 · உபாகமம் 5:18 · ரோமர் 7:2-3 · ரோமர் 13:9 · லேவியராகமம் 20:10 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8
15களவு செய்யாதிருப்பாயாக.
Relatedரோமர் 13:9 · எபேசியர் 4:28 · லேவியராகமம் 19:11 · லேவியராகமம் 19:13 · மத்தேயு 19:18 · I கொரிந்தியர் 6:10
16பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Relatedநீதிமொழிகள் 19:5 · மத்தேயு 19:18 · சங்கீதம் 15:3 · யாத்திராகமம் 23:1 · உபாகமம் 19:15-21 · மத்தேயு 26:59-60
17பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
18ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
19மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
Relatedஉபாகமம் 18:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38 · யாத்திராகமம் 33:20 · உபாகமம் 5:23-27 · கலாத்தியர் 3:19 · ஆதியாகமம் 32:30
20மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
Relatedஉபாகமம் 13:3 · நீதிமொழிகள் 3:7 · ஏசாயா 8:13 · I சாமுவேல் 12:20 · நீதிமொழிகள் 16:6 · ஆதியாகமம் 22:1
21ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
RelatedI இராஜாக்கள் 8:12 · சங்கீதம் 97:2 · சங்கீதம் 18:9 · I தீமோத்தேயு 6:16 · II நாளாகமம் 6:1 · சங்கீதம் 104:2
22அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
23நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
Relatedஎசேக்கியேல் 20:39 · II இராஜாக்கள் 17:33 · செப்பனியா 1:5 · I கொரிந்தியர் 10:21-22 · யாத்திராகமம் 20:3-5 · யாத்திராகமம் 32:31
24மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
Relatedஉபாகமம் 12:5 · சங்கீதம் 132:13-14 · II நாளாகமம் 6:6 · I இராஜாக்கள் 9:3 · உபாகமம் 12:11 · II நாளாகமம் 7:16
25எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.
26என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS