கலாத்தியர் 2
Tamil Bible (BSI 1957) • 21 verses
1பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
Relatedகலாத்தியர் 2:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2 · I கொரிந்தியர் 9:6 · II கொரிந்தியர் 8:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50
2நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.
Relatedகலாத்தியர் 2:6 · பிலிப்பியர் 2:16 · I தெசலோனிக்கேயர் 3:5 · I கொரிந்தியர் 9:26 · I கொரிந்தியர் 1:23 · கலாத்தியர் 2:9
3ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
Relatedகலாத்தியர் 5:2-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3 · I கொரிந்தியர் 9:20-21 · II கொரிந்தியர் 2:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24
4கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
Relatedகலாத்தியர் 5:1 · யூதா 1:4 · I யோவான் 4:1 · II பேதுரு 2:1-2 · கலாத்தியர் 5:12-13 · II கொரிந்தியர் 11:26
5சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
Relatedகலாத்தியர் 4:16 · கலாத்தியர் 2:14 · கலாத்தியர் 3:1-2 · கொலோசெயர் 1:5 · யூதா 1:3 · கொலோசெயர் 2:4-8
6அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
Relatedகலாத்தியர் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34 · ரோமர் 2:11 · II கொரிந்தியர் 12:11 · II கொரிந்தியர் 11:5 · I பேதுரு 1:17
7அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · I தெசலோனிக்கேயர் 2:4 · கலாத்தியர் 1:16 · I தீமோத்தேயு 2:7 · II தீமோத்தேயு 1:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46-48
8விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:14-41 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12
9எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
Relatedரோமர் 12:3 · வெளிப்படுத்தின விசேஷம் 3:12 · எபேசியர் 3:8 · கலாத்தியர் 2:2 · I யோவான் 1:3 · வெளிப்படுத்தின விசேஷம் 21:14-20
10தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17 · எபிரெயர் 13:16 · I யோவான் 3:17 · II கொரிந்தியர் 8:1-9 · I கொரிந்தியர் 16:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29-30
11மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
RelatedI தீமோத்தேயு 5:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · கலாத்தியர் 2:14 · II கொரிந்தியர் 5:16 · II கொரிந்தியர் 12:11 · கலாத்தியர் 2:7
12எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:28 · லூக்கா 15:2 · எபேசியர் 3:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:2-3 · ஏசாயா 57:11 · மத்தேயு 26:69-75
13மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
RelatedI கொரிந்தியர் 15:33 · எபிரெயர் 13:9 · எபேசியர் 4:14 · I கொரிந்தியர் 5:6 · I கொரிந்தியர் 8:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36
14இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:28 · கலாத்தியர் 2:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10-11 · I தீமோத்தேயு 5:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28-29 · சங்கீதம் 84:11
15புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
16நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
Relatedபிலிப்பியர் 3:9 · சங்கீதம் 143:2 · ரோமர் 3:19-28 · ரோமர் 9:30 · I பேதுரு 1:18-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:38-39
17கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
Relatedரோமர் 6:1-2 · I யோவான் 3:8-10 · I யோவான் 3:5 · கலாத்தியர் 2:15 · ரோமர் 9:30-33 · மத்தேயு 1:21
18நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
Relatedகலாத்தியர் 4:9-12 · கலாத்தியர் 2:4-5 · கலாத்தியர் 2:12-16 · கலாத்தியர் 2:21 · ரோமர் 14:15 · I கொரிந்தியர் 8:11-12
19தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
Relatedரோமர் 7:4 · ரோமர் 6:2 · I தெசலோனிக்கேயர் 5:10 · II கொரிந்தியர் 5:15 · ரோமர் 6:11 · ரோமர் 3:19-20
20கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
Relatedகலாத்தியர் 5:24 · II கொரிந்தியர் 5:15 · ரோமர் 6:4-6 · கொலோசெயர் 3:3-4 · II கொரிந்தியர் 4:10-11 · ரோமர் 6:8
21நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
Relatedரோமர் 11:6 · கலாத்தியர் 3:21 · எபிரெயர் 7:11 · I கொரிந்தியர் 15:14 · கலாத்தியர் 2:16 · கலாத்தியர் 5:2-4
📖 கலாத்தியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS