உன்னதப்பாட்டு 1
Tamil Bible (BSI 1957) • 17 verses
1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
2அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
Relatedஉன்னதப்பாட்டு 4:10 · சங்கீதம் 36:7 · உன்னதப்பாட்டு 1:4 · ஏசாயா 55:1-2 · சங்கீதம் 63:3-5 · லூக்கா 15:20
3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
Relatedபிரசங்கி 7:1 · யோவான் 12:3 · யாத்திராகமம் 30:23-28 · உன்னதப்பாட்டு 4:10 · சங்கீதம் 45:7-8 · பிலிப்பியர் 2:9-10
4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
5எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.
Relatedலூக்கா 15:22 · உன்னதப்பாட்டு 2:14 · உன்னதப்பாட்டு 2:7 · II கொரிந்தியர் 5:21 · உன்னதப்பாட்டு 5:16 · சங்கீதம் 120:5
6நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
Relatedஉன்னதப்பாட்டு 8:11-12 · லூக்கா 12:51-53 · மாற்கு 4:6 · சங்கீதம் 69:8 · எரேமியா 12:6 · யோபு 30:30
7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
Relatedஉன்னதப்பாட்டு 3:1-4 · ஏசாயா 13:20 · சங்கீதம் 23:1-2 · சங்கீதம் 28:1 · ஆதியாகமம் 37:16 · ஏசாயா 26:9
8ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
Relatedஉன்னதப்பாட்டு 6:1 · உன்னதப்பாட்டு 5:9 · யாக்கோபு 5:10 · யாக்கோபு 2:21 · எபிரெயர் 11:4-40 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8
9என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
Relatedஉன்னதப்பாட்டு 2:13 · உன்னதப்பாட்டு 2:10 · யோவான் 15:14-15 · உன்னதப்பாட்டு 5:2 · உன்னதப்பாட்டு 4:7 · ஏசாயா 31:1
10ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
Relatedஎசேக்கியேல் 16:11-13 · I பேதுரு 3:4 · ஆதியாகமம் 24:47 · உன்னதப்பாட்டு 5:13 · ஆதியாகமம் 41:42 · நீதிமொழிகள் 1:9
11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.
Relatedயோவான் 12:3 · வெளிப்படுத்தின விசேஷம் 3:20 · மாற்கு 14:3 · மத்தேயு 25:34 · மத்தேயு 26:26-28 · உன்னதப்பாட்டு 4:13-16
13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
Relatedயோவான் 19:39 · சங்கீதம் 45:8 · எபேசியர் 3:17 · உன்னதப்பாட்டு 4:6 · உன்னதப்பாட்டு 3:5 · உன்னதப்பாட்டு 5:13
14என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
RelatedI சாமுவேல் 23:29-24:1 · உன்னதப்பாட்டு 2:3 · உன்னதப்பாட்டு 1:13 · யோசுவா 15:62 · உன்னதப்பாட்டு 4:13-14
15என் பிரியமே! நீ ரூபவதி; நீ ருபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
Relatedஉன்னதப்பாட்டு 4:1 · உன்னதப்பாட்டு 5:12 · உன்னதப்பாட்டு 4:7 · எபேசியர் 1:17-18 · II கொரிந்தியர் 11:2-3 · மல்கியா 2:14
16நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.
Relatedஉன்னதப்பாட்டு 2:3 · சங்கீதம் 45:2 · சகரியா 9:17 · உன்னதப்பாட்டு 3:7 · உன்னதப்பாட்டு 5:10-16 · பிலிப்பியர் 3:8-9
17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS