எண்ணாகமம் 24
Tamil Bible (BSI 1957) • 25 verses
1இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல நிமித்தம் பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,
Relatedஎண்ணாகமம் 23:23 · எண்ணாகமம் 31:16 · எண்ணாகமம் 22:13 · எண்ணாகமம் 23:15 · எண்ணாகமம் 23:28 · எண்ணாகமம் 23:3
2தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
RelatedI சாமுவேல் 19:20 · II நாளாகமம் 15:1 · I சாமுவேல் 10:10 · I சாமுவேல் 19:23 · எண்ணாகமம் 2:2-34 · எண்ணாகமம் 11:25-29
3அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:17 · வெளிப்படுத்தின விசேஷம் 1:10 · II கொரிந்தியர் 12:1-4 · எசேக்கியேல் 1:28 · எண்ணாகமம் 12:6 · தானியேல் 8:17-18
5யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
Relatedசங்கீதம் 1:3 · ஏசாயா 58:11 · சங்கீதம் 104:16 · சங்கீதம் 45:8 · உன்னதப்பாட்டு 6:11 · ஏசாயா 41:19
7அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.
RelatedII சாமுவேல் 5:12 · I நாளாகமம் 14:2 · எரேமியா 51:13 · வெளிப்படுத்தின விசேஷம் 17:1 · வெளிப்படுத்தின விசேஷம் 17:15 · I சாமுவேல் 15:8-9
8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
Relatedசங்கீதம் 45:5 · எரேமியா 50:17 · எண்ணாகமம் 23:24 · எண்ணாகமம் 14:9 · எண்ணாகமம் 23:22 · சங்கீதம் 2:9
9சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
Relatedஆதியாகமம் 12:3 · ஆதியாகமம் 27:29 · ஆதியாகமம் 49:9 · எண்ணாகமம் 23:24 · மத்தேயு 25:45 · யோபு 38:39-40
10அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
Relatedஎசேக்கியேல் 21:14 · எண்ணாகமம் 23:11 · எசேக்கியேல் 21:17 · எசேக்கியேல் 22:13 · யோபு 27:23 · யோசுவா 24:9-10
11ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.
Relatedஎண்ணாகமம் 22:17 · எண்ணாகமம் 22:37 · எபிரெயர் 11:24-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:20 · மத்தேயு 19:28-30 · II யோவான் 1:8
12அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
13நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
14இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
Relatedமீகா 6:5 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14 · ஆதியாகமம் 49:1 · தானியேல் 2:28 · II தீமோத்தேயு 3:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17
15அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:16 · லூக்கா 1:32-33 · ஆதியாகமம் 49:10 · வெளிப்படுத்தின விசேஷம் 1:7 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · சங்கீதம் 45:6
18ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
Relatedஆமோஸ் 9:12 · II சாமுவேல் 8:14 · ஆதியாகமம் 27:29 · ஆதியாகமம் 27:40 · ஏசாயா 63:1 · சங்கீதம் 60:1
19யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
Relatedயாத்திராகமம் 17:14 · யாத்திராகமம் 17:8 · I சாமுவேல் 14:48 · எஸ்தர் 7:9-10 · எஸ்தர் 9:14 · I சாமுவேல் 30:1
21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாள் செல்லும் என்றான்.
23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
Relatedஆதியாகமம் 10:4 · ஆதியாகமம் 10:21-25 · தானியேல் 10:20 · தானியேல் 11:30 · எண்ணாகமம் 24:20 · தானியேல் 11:45
25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
📖 எண்ணாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS