உன்னதப்பாட்டு 8
Tamil Bible (BSI 1957) • 14 verses
1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
Relatedஉன்னதப்பாட்டு 3:4 · உன்னதப்பாட்டு 4:10-5:1 · உன்னதப்பாட்டு 7:12 · கலாத்தியர் 4:26 · II தீமோத்தேயு 3:15 · நீதிமொழிகள் 9:2
3அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
4எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
5தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
Relatedஉன்னதப்பாட்டு 3:6 · ஏசாயா 40:3 · சங்கீதம் 63:8 · உன்னதப்பாட்டு 2:3 · உன்னதப்பாட்டு 6:10 · உன்னதப்பாட்டு 3:4
6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 12:11 · ஏசாயா 49:16 · பிலிப்பியர் 1:20-23 · யோவான் 21:15-19 · எண்ணாகமம் 5:14 · நீதிமொழிகள் 6:34
7திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
Relatedநீதிமொழிகள் 6:35 · ரோமர் 13:8-10 · நீதிமொழிகள் 6:31 · ஏசாயா 43:2 · மத்தேயு 7:24-25 · ரோமர் 8:28-39
8நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
RelatedI பேதுரு 2:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21 · சங்கீதம் 2:8 · எசேக்கியேல் 16:55-56 · உன்னதப்பாட்டு 4:5 · உன்னதப்பாட்டு 7:3
9அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · சகரியா 6:12-15 · ஏசாயா 60:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:16 · மத்தேயு 16:18 · வெளிப்படுத்தின விசேஷம் 21:12-19
10நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.
Relatedலூக்கா 1:30 · ஏசாயா 60:10 · எசேக்கியேல் 16:7 · உன்னதப்பாட்டு 4:5 · உன்னதப்பாட்டு 7:7-8 · எபேசியர் 1:6
11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
Relatedபிரசங்கி 2:4 · ஏசாயா 7:23 · ஏசாயா 5:1-7 · உன்னதப்பாட்டு 7:12 · உன்னதப்பாட்டு 1:6 · மாற்கு 12:1
12என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
Relatedஉன்னதப்பாட்டு 1:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 · I கொரிந்தியர் 6:20 · சங்கீதம் 72:17-19 · நீதிமொழிகள் 4:23 · I தெசலோனிக்கேயர் 2:19
13தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
Relatedஉன்னதப்பாட்டு 4:16 · உன்னதப்பாட்டு 1:7 · உன்னதப்பாட்டு 3:7-11 · சங்கீதம் 45:14 · நியாயாதிபதிகள் 14:11 · உன்னதப்பாட்டு 6:2
14என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS