உன்னதப்பாட்டு 4
Tamil Bible (BSI 1957) • 16 verses
1நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 1:15 · உன்னதப்பாட்டு 6:5 · உன்னதப்பாட்டு 6:7 · உன்னதப்பாட்டு 7:5 · உன்னதப்பாட்டு 2:14 · மீகா 7:14
2உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 6:6 · II பேதுரு 1:5-8 · I தெசலோனிக்கேயர் 2:13 · உபாகமம் 7:13-14 · எரேமியா 15:16 · கொலோசெயர் 1:4-6
3உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 6:7 · யோசுவா 2:18 · உன்னதப்பாட்டு 5:16 · ஆதியாகமம் 32:10 · சங்கீதம் 119:13 · லேவியராகமம் 14:6
4உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 7:4 · எசேக்கியேல் 27:10-11 · I பேதுரு 1:5 · எபேசியர் 4:15-16 · நெகேமியா 3:19 · கொலோசெயர் 2:19
5உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
Relatedஉன்னதப்பாட்டு 6:3 · உன்னதப்பாட்டு 2:16 · உன்னதப்பாட்டு 7:3 · உன்னதப்பாட்டு 8:10 · நீதிமொழிகள் 5:19 · I பேதுரு 2:2
6பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.
Relatedஉன்னதப்பாட்டு 2:17 · உன்னதப்பாட்டு 4:14 · லூக்கா 1:78 · II பேதுரு 1:19 · I யோவான் 2:8 · வெளிப்படுத்தின விசேஷம் 5:8
7என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
Relatedஉன்னதப்பாட்டு 1:15 · உன்னதப்பாட்டு 4:1 · கொலோசெயர் 1:22 · யூதா 1:24 · எபேசியர் 5:25-27 · சங்கீதம் 45:11
8லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
Relatedஉபாகமம் 3:9 · உன்னதப்பாட்டு 2:13 · I நாளாகமம் 5:23 · சங்கீதம் 45:10 · ஏசாயா 62:5 · கொலோசெயர் 3:1-2
9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.
Relatedநீதிமொழிகள் 5:19-20 · உன்னதப்பாட்டு 4:12 · உன்னதப்பாட்டு 5:1-2 · II கொரிந்தியர் 11:2 · உன்னதப்பாட்டு 7:5-6 · ஓசியா 2:19-20
10உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
Relatedஉன்னதப்பாட்டு 1:2-4 · உன்னதப்பாட்டு 7:6 · கலாத்தியர் 5:22 · உன்னதப்பாட்டு 3:6 · உன்னதப்பாட்டு 1:12 · பிலிப்பியர் 4:18
11என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 5:1 · ஓசியா 14:6-7 · உன்னதப்பாட்டு 5:13 · ஆதியாகமம் 27:27 · உன்னதப்பாட்டு 7:9 · நீதிமொழிகள் 24:13-14
12என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
Relatedநீதிமொழிகள் 5:15-18 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · ஏசாயா 61:10-11 · I கொரிந்தியர் 6:13 · வெளிப்படுத்தின விசேஷம் 7:3 · I கொரிந்தியர் 6:19-20
13உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
Relatedஉன்னதப்பாட்டு 1:14 · பிரசங்கி 2:5 · உன்னதப்பாட்டு 6:11 · உன்னதப்பாட்டு 1:12 · உன்னதப்பாட்டு 6:2 · ஏசாயா 61:11
14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.
Relatedயாத்திராகமம் 30:23 · உன்னதப்பாட்டு 4:6 · உன்னதப்பாட்டு 3:6 · உன்னதப்பாட்டு 6:2 · உன்னதப்பாட்டு 1:12 · எசேக்கியேல் 27:19
15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
16வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS