உன்னதப்பாட்டு 6
Tamil Bible (BSI 1957) • 13 verses
1உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
Relatedஉன்னதப்பாட்டு 1:8 · உன்னதப்பாட்டு 5:9 · எரேமியா 14:8 · ரூத் 2:12 · உன்னதப்பாட்டு 6:9-10 · உன்னதப்பாட்டு 6:4
2தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார்.
Relatedஉன்னதப்பாட்டு 5:13 · ஏசாயா 61:11 · யோவான் 4:34-35 · யோவான் 17:24 · ஏசாயா 40:11 · உன்னதப்பாட்டு 4:12-5:1
3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
4என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
Relatedஉன்னதப்பாட்டு 6:10 · சங்கீதம் 48:2 · I இராஜாக்கள் 14:17 · புலம்பல் 2:15 · வெளிப்படுத்தின விசேஷம் 21:2 · உன்னதப்பாட்டு 4:7
5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
Relatedஆதியாகமம் 32:26-28 · எரேமியா 15:1 · யாத்திராகமம் 32:10 · மத்தேயு 15:27-28 · உன்னதப்பாட்டு 4:1-3
6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 4:3
8ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
Relatedசங்கீதம் 45:14 · I இராஜாக்கள் 11:3 · I இராஜாக்கள் 11:1 · சங்கீதம் 45:9 · II நாளாகமம் 11:21 · வெளிப்படுத்தின விசேஷம் 7:9
9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
Relatedஉன்னதப்பாட்டு 2:14 · ஆதியாகமம் 30:13 · சங்கீதம் 45:9 · நீதிமொழிகள் 31:28-29 · வெளிப்படுத்தின விசேஷம் 21:9-10 · உன்னதப்பாட்டு 5:2
10சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?
Relatedஉன்னதப்பாட்டு 6:4 · வெளிப்படுத்தின விசேஷம் 12:1 · யோபு 31:26 · II சாமுவேல் 23:4 · மத்தேயு 17:2 · உன்னதப்பாட்டு 3:6
11பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.
Relatedஉன்னதப்பாட்டு 7:12 · ஆதியாகமம் 2:9 · உன்னதப்பாட்டு 4:12-15 · உன்னதப்பாட்டு 6:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:36 · உன்னதப்பாட்டு 5:1
12நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
13திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.
Relatedஆதியாகமம் 32:2 · நியாயாதிபதிகள் 21:21 · எரேமியா 3:22 · ஓசியா 14:1-4 · உன்னதப்பாட்டு 1:6 · ரோமர் 3:29
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS