வெளிப்படுத்தின விசேஷம் 5
Tamil Bible (BSI 1957) • 14 verses
1அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
Relatedஎசேக்கியேல் 2:9-10 · ஏசாயா 29:11 · வெளிப்படுத்தின விசேஷம் 5:7 · தானியேல் 12:4-9 · வெளிப்படுத்தின விசேஷம் 6:1 · வெளிப்படுத்தின விசேஷம் 5:13
2புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்.
Relatedஏசாயா 29:11-12 · வெளிப்படுத்தின விசேஷம் 5:5 · வெளிப்படுத்தின விசேஷம் 10:1 · சங்கீதம் 103:20 · ஏசாயா 41:22-23 · வெளிப்படுத்தின விசேஷம் 18:21
3வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
4ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
5அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
Relatedஏசாயா 11:1 · எரேமியா 23:5-6 · வெளிப்படுத்தின விசேஷம் 22:16 · ரோமர் 15:12 · ஏசாயா 11:10 · எபிரெயர் 7:14
6அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
Relatedசகரியா 4:10 · வெளிப்படுத்தின விசேஷம் 5:12 · யோவான் 1:29 · சகரியா 3:9 · யோவான் 1:36 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8
7அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.
8அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
Relatedசங்கீதம் 141:2 · வெளிப்படுத்தின விசேஷம் 8:3-4 · பிலிப்பியர் 2:9-11 · வெளிப்படுத்தின விசேஷம் 4:10 · சங்கீதம் 33:2 · வெளிப்படுத்தின விசேஷம் 5:14
9தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
RelatedI பேதுரு 1:18-19 · I யோவான் 1:7 · மத்தேயு 26:28 · ரோமர் 3:24-26 · சங்கீதம் 40:3 · வெளிப்படுத்தின விசேஷம் 14:6
10எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:6 · தானியேல் 7:27 · தானியேல் 7:18 · வெளிப்படுத்தின விசேஷம் 20:6 · வெளிப்படுத்தின விசேஷம் 22:5 · I பேதுரு 2:5-9
11பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
Relatedதானியேல் 7:10 · எபிரெயர் 12:22 · வெளிப்படுத்தின விசேஷம் 4:6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:4 · சங்கீதம் 148:2 · வெளிப்படுத்தின விசேஷம் 19:6
12அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 5:9 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1 · வெளிப்படுத்தின விசேஷம் 4:11 · யோவான் 17:2 · II கொரிந்தியர் 8:9 · வெளிப்படுத்தின விசேஷம் 7:12
13அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
Relatedபிலிப்பியர் 2:10 · I நாளாகமம் 29:11 · சங்கீதம் 148:2-13 · வெளிப்படுத்தின விசேஷம் 5:12 · ரோமர் 11:36 · I பேதுரு 5:11
14அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS