யோபு 6
Tamil Bible (BSI 1957) • 30 verses
1யோபு பிரதியுத்தரமாக:
Relatedயோபு 4:1
2என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
3அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
Relatedசங்கீதம் 38:2 · யோபு 30:15 · சங்கீதம் 88:15-16 · நீதிமொழிகள் 18:14 · யோபு 16:12-14 · மாற்கு 15:34
5புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது.
Relatedஎசேக்கியேல் 4:16 · யோபு 3:24 · எசேக்கியேல் 4:14 · சங்கீதம் 102:9 · I இராஜாக்கள் 22:27 · I இராஜாக்கள் 17:12
8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,
9தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
10அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
Relatedயோபு 23:12 · ஏசாயா 57:15 · லேவியராகமம் 19:2 · சங்கீதம் 40:9-10 · சங்கீதம் 71:17-18 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7
11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?
Relatedசங்கீதம் 103:14-16 · சங்கீதம் 102:23 · யோபு 17:1 · சங்கீதம் 39:5 · யோபு 10:20 · சங்கீதம் 90:5-10
12என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே.
14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதே போகிறான்.
Relatedநீதிமொழிகள் 17:17 · கலாத்தியர் 6:2 · I கொரிந்தியர் 12:26 · ரோமர் 12:15 · எபிரெயர் 13:3 · லூக்கா 23:40
15என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்து போகிறார்கள்.
Relatedசங்கீதம் 38:11 · எரேமியா 15:18 · சங்கீதம் 41:9 · யோவான் 16:32 · யோவான் 13:18 · சங்கீதம் 55:12-14
16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்து போகின்றன.
18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
19தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
Relatedஏசாயா 21:14 · ஆதியாகமம் 25:15 · எரேமியா 25:23 · I இராஜாக்கள் 10:1 · ஆதியாகமம் 25:3 · எசேக்கியேல் 27:22-23
20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.
21அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
Relatedசங்கீதம் 38:11 · II தீமோத்தேயு 4:16 · எரேமியா 17:5-6 · நீதிமொழிகள் 19:7 · சங்கீதம் 62:9 · ஏசாயா 2:22
22எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;
23அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
Relatedசங்கீதம் 49:7-8 · சங்கீதம் 49:15 · யோபு 5:20 · எரேமியா 15:21 · சங்கீதம் 107:2 · லேவியராகமம் 25:48
24எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
25செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
Relatedயோபு 21:34 · நீதிமொழிகள் 18:21 · நீதிமொழிகள் 12:18 · யோபு 24:25 · யோபு 16:3-5 · நீதிமொழிகள் 25:11
26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
28இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
29நீங்கள் திரும்புங்கள்; அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
30என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS