எரேமியா 28
Tamil Bible (BSI 1957) • 17 verses
1யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம் வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
2இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
3பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பண்ணுவேன்.
RelatedII இராஜாக்கள் 24:13 · II நாளாகமம் 36:10 · தானியேல் 1:2 · சங்கீதம் 90:10 · ஆதியாகமம் 47:28 · எரேமியா 27:16-22
4யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
Relatedஎரேமியா 22:24 · எரேமியா 24:1 · II இராஜாக்கள் 25:27-30 · எரேமியா 28:2 · நாகூம் 1:13 · எரேமியா 2:20
5அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
6ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
Relatedசங்கீதம் 41:13 · I இராஜாக்கள் 1:36 · எரேமியா 11:5 · வெளிப்படுத்தின விசேஷம் 5:14 · II கொரிந்தியர் 1:20 · எரேமியா 17:16
7ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
RelatedI இராஜாக்கள் 22:28
8பூர்வகாலமுதல் எனக்குமுன்னும் உனக்குமுன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
RelatedI இராஜாக்கள் 17:1 · I இராஜாக்கள் 22:8 · உபாகமம் 4:26-27 · I சாமுவேல் 2:27-32 · யோவேல் 1:2-20 · ஏசாயா 13:18
9சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
Relatedஉபாகமம் 18:22 · எரேமியா 6:14 · எரேமியா 8:11 · எசேக்கியேல் 13:10-16 · எரேமியா 14:13 · எரேமியா 4:10
10அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
Relatedஎரேமியா 27:2 · எரேமியா 28:2 · எரேமியா 28:4 · I இராஜாக்கள் 22:11 · I இராஜாக்கள் 22:24-25 · மல்கியா 3:13
11பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.
RelatedII நாளாகமம் 18:22-23 · நீதிமொழிகள் 14:7 · எரேமியா 14:14 · I இராஜாக்கள் 22:11-12 · எரேமியா 29:9 · எரேமியா 27:2-12
12அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13நீ போய், அனனியாவை நோக்கி: நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.
14பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Relatedஉபாகமம் 28:48 · எரேமியா 27:6-7 · உபாகமம் 4:20 · வெளிப்படுத்தின விசேஷம் 17:12-13 · தானியேல் 2:38 · எரேமியா 25:9-26
15பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
Relatedஎரேமியா 14:14-15 · எரேமியா 27:15 · எரேமியா 23:21 · எசேக்கியேல் 13:2-3 · எசேக்கியேல் 22:28 · புலம்பல் 2:14
16ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
Relatedஎரேமியா 29:32 · ஆதியாகமம் 7:4 · உபாகமம் 6:15 · I இராஜாக்கள் 13:34 · எரேமியா 20:6 · யாத்திராகமம் 32:12
17அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.
📖 எரேமியாAll 52 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS