ஆதியாகமம் 18
Tamil Bible (BSI 1957) • 33 verses
1பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
Relatedஆதியாகமம் 14:13 · ஆதியாகமம் 13:18 · ஆதியாகமம் 48:3 · ஆதியாகமம் 17:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:2 · ஆதியாகமம் 26:2
2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:
Relatedஎபிரெயர் 13:2 · ஆதியாகமம் 18:22 · ஆதியாகமம் 19:1 · நியாயாதிபதிகள் 13:3 · ஆதியாகமம் 23:7 · ஆதியாகமம் 43:28
3ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.
Relatedஆதியாகமம் 32:5
4கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
Relatedஆதியாகமம் 24:32 · ஆதியாகமம் 19:2 · ஆதியாகமம் 43:24 · லூக்கா 7:44 · யோவான் 13:5-15 · I சாமுவேல் 25:41
5நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
Relatedசங்கீதம் 104:15 · நியாயாதிபதிகள் 6:18 · நியாயாதிபதிகள் 13:15 · ஆதியாகமம் 19:8 · நியாயாதிபதிகள் 19:5 · மத்தேயு 6:11
6அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
Relatedரோமர் 12:13 · கலாத்தியர் 5:13 · மத்தேயு 13:33 · ஏசாயா 32:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15 · லூக்கா 10:38-40
7ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.
Relatedநியாயாதிபதிகள் 13:15-16 · ஆமோஸ் 6:4 · லூக்கா 15:23 · லூக்கா 15:30 · மத்தேயு 22:4 · ஆதியாகமம் 19:3
8ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
Relatedஆதியாகமம் 19:3 · லூக்கா 24:30 · லூக்கா 12:37 · லூக்கா 24:43 · லூக்கா 17:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:41
9அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
10அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
Relatedஆதியாகமம் 21:2 · ஆதியாகமம் 17:21 · ரோமர் 9:8-9 · II இராஜாக்கள் 4:16-17 · ஆதியாகமம் 17:19 · ஆதியாகமம் 17:16
11ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
Relatedஆதியாகமம் 17:17 · எபிரெயர் 11:11-12 · லூக்கா 1:36 · ரோமர் 4:18-21 · லூக்கா 1:18 · ஆதியாகமம் 17:24
12ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
RelatedI பேதுரு 3:6 · ஆதியாகமம் 17:17 · லூக்கா 1:18-20 · ஆதியாகமம் 18:13 · ஆதியாகமம் 21:6-7 · லூக்கா 1:34-35
13அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
Relatedயோவான் 2:25
14கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
15சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
16பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:5 · III யோவான் 1:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:3 · ரோமர் 15:24
17அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
Relatedஆமோஸ் 3:7 · சங்கீதம் 25:14 · யோவான் 15:15 · யாக்கோபு 2:23 · ஆதியாகமம் 19:24 · II நாளாகமம் 20:7
18நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
Relatedகலாத்தியர் 3:8 · ஆதியாகமம் 26:4 · கலாத்தியர் 3:14 · ஆதியாகமம் 12:2-3 · ஆதியாகமம் 22:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:25-26
19கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
RelatedI தீமோத்தேயு 3:4-5 · உபாகமம் 6:6-7 · உபாகமம் 4:9-10 · எபேசியர் 6:4 · II தீமோத்தேயு 3:15 · நீதிமொழிகள் 6:20-22
20பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,
Relatedஆதியாகமம் 19:13 · எசேக்கியேல் 16:49-50 · ஏசாயா 3:9 · ஆதியாகமம் 13:13 · ஆதியாகமம் 4:10 · யாக்கோபு 5:4
21நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
Relatedயாத்திராகமம் 3:8 · ஆதியாகமம் 11:5 · யோசுவா 22:22 · செப்பனியா 1:12 · எரேமியா 17:10 · ஆதியாகமம் 11:7
22அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
Relatedஆதியாகமம் 19:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55 · I தீமோத்தேயு 2:1 · எசேக்கியேல் 22:30 · எரேமியா 18:20 · சங்கீதம் 106:23
23அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
Relatedஎண்ணாகமம் 16:22 · II சாமுவேல் 24:17 · ஆதியாகமம் 20:4 · சங்கீதம் 11:4-7 · ரோமர் 3:5-6 · யோபு 34:17
24பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
25துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
26அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
27அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
28ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
29அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
30அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
Relatedசங்கீதம் 10:17 · ஏசாயா 55:8-9 · யோபு 40:4 · ஏசாயா 6:5 · நியாயாதிபதிகள் 6:39 · எபிரெயர் 12:28-29
31அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
32அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
Relatedயாக்கோபு 5:15-17 · நியாயாதிபதிகள் 6:39 · மத்தேயு 7:7 · I யோவான் 5:15-16 · மீகா 7:18 · எபேசியர் 3:20
33கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS