எசேக்கியேல் 2
Tamil Bible (BSI 1957) • 10 verses
1அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
Relatedதானியேல் 10:11 · எசேக்கியேல் 4:1 · எசேக்கியேல் 3:17 · எசேக்கியேல் 3:4 · எசேக்கியேல் 3:1 · எசேக்கியேல் 5:1
2இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
Relatedஎசேக்கியேல் 3:24 · எண்ணாகமம் 11:25-26 · எசேக்கியேல் 3:12 · நியாயாதிபதிகள் 13:25 · எசேக்கியேல் 3:14 · தானியேல் 8:18
3அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.
Relatedஎரேமியா 3:25 · I சாமுவேல் 8:7-8 · தானியேல் 9:5-13 · உபாகமம் 9:24 · எரேமியா 44:21 · நெகேமியா 9:33-35
4அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
Relatedஎசேக்கியேல் 3:7 · சங்கீதம் 95:8 · எரேமியா 5:3 · எரேமியா 6:15 · ஏசாயா 48:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:26-27
5கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
Relatedஎசேக்கியேல் 33:33 · எசேக்கியேல் 3:27 · யோவான் 15:22 · மத்தேயு 10:12-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 · எசேக்கியேல் 2:7
6மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.
7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
Relatedஎரேமியா 23:28 · எசேக்கியேல் 2:5 · எரேமியா 1:7 · எசேக்கியேல் 3:17 · எசேக்கியேல் 3:10 · எரேமியா 1:17
8மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 10:9 · எரேமியா 15:16 · ஏசாயா 50:5 · எசேக்கியேல் 3:1-3 · I தீமோத்தேயு 4:14-16 · எசேக்கியேல் 3:10
9அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது.
Relatedஎசேக்கியேல் 8:3 · வெளிப்படுத்தின விசேஷம் 5:1-5 · வெளிப்படுத்தின விசேஷம் 10:8-11 · தானியேல் 10:10 · எசேக்கியேல் 3:1 · எரேமியா 36:2
10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS