யாத்திராகமம் 12
Tamil Bible (BSI 1957) • 51 verses
1கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
Relatedயாத்திராகமம் 13:4 · உபாகமம் 16:1 · யாத்திராகமம் 34:18 · யாத்திராகமம் 23:15 · எண்ணாகமம் 28:16 · லேவியராகமம் 23:5
3நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
Relatedலேவியராகமம் 1:2 · யோவான் 1:29 · லேவியராகமம் 5:6 · I கொரிந்தியர் 5:7 · யோவான் 12:12 · ஆதியாகமம் 22:8
4ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
5அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
Relatedஎபிரெயர் 9:13-14 · I பேதுரு 1:18-19 · மல்கியா 1:14 · மல்கியா 1:7-8 · உபாகமம் 17:1 · எபிரெயர் 7:26
6அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
Relatedலேவியராகமம் 23:5 · எண்ணாகமம் 28:16 · II நாளாகமம் 30:15-18 · எண்ணாகமம் 9:11 · எண்ணாகமம் 9:1-3 · யாத்திராகமம் 12:18
7அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
Relatedயாத்திராகமம் 12:22-23 · எபிரெயர் 11:28 · எபிரெயர் 9:22 · எபேசியர் 1:7 · I பேதுரு 1:2 · எபிரெயர் 10:14
8அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
Relatedயாத்திராகமம் 34:25 · உபாகமம் 16:7 · உபாகமம் 16:3-4 · யோவான் 6:52-57 · யாத்திராகமம் 23:18 · யாத்திராகமம் 13:7
9பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
Relatedயாத்திராகமம் 23:18 · யாத்திராகமம் 34:25 · யாத்திராகமம் 29:34 · லேவியராகமம் 22:30 · உபாகமம் 16:4-5 · லேவியராகமம் 7:15-17
11அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
Relatedஎபேசியர் 6:15 · யாத்திராகமம் 12:27 · I பேதுரு 1:13 · I கொரிந்தியர் 5:7 · லூக்கா 12:35 · உபாகமம் 16:2-6
12அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
Relatedஎண்ணாகமம் 33:4 · சங்கீதம் 82:6 · யாத்திராகமம் 12:23 · ஏசாயா 19:1 · செப்பனியா 2:11 · சங்கீதம் 82:1
13நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
Relatedஎபிரெயர் 11:28 · யாத்திராகமம் 12:23 · I யோவான் 1:7 · யோசுவா 2:12 · ஆதியாகமம் 17:11 · I தெசலோனிக்கேயர் 1:10
14அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
RelatedII இராஜாக்கள் 23:21 · யாத்திராகமம் 12:24 · யாத்திராகமம் 13:9-10 · யாத்திராகமம் 12:17 · I கொரிந்தியர் 5:7-8 · லேவியராகமம் 23:4-5
15புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம். புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
Relatedஉபாகமம் 16:3 · ஆதியாகமம் 17:14 · யாத்திராகமம் 34:18 · யாத்திராகமம் 23:15 · எண்ணாகமம் 28:17 · எண்ணாகமம் 9:13
16முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
Relatedலேவியராகமம் 23:7-8 · எண்ணாகமம் 28:18 · எண்ணாகமம் 28:25 · யாத்திராகமம் 16:23 · யாத்திராகமம் 35:2-3 · லேவியராகமம் 23:2-3
17புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
Relatedயாத்திராகமம் 12:41 · யாத்திராகமம் 13:3 · யாத்திராகமம் 7:5 · யாத்திராகமம் 13:8 · எண்ணாகமம் 20:16
18முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
19ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
Relatedயாத்திராகமம் 12:15 · யாத்திராகமம் 23:15 · உபாகமம் 16:3 · யாத்திராகமம் 34:18 · எண்ணாகமம் 9:13 · யாத்திராகமம் 12:48
20புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
21அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
Relatedயாத்திராகமம் 12:3 · எஸ்றா 6:20 · மாற்கு 14:12-16 · யோசுவா 5:10 · II இராஜாக்கள் 23:21 · எண்ணாகமம் 9:2-5
22ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
Relatedஎபிரெயர் 11:28 · எண்ணாகமம் 19:18 · சங்கீதம் 51:7 · யாத்திராகமம் 12:7 · எபிரெயர் 9:1 · எபிரெயர் 9:14
23கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:3 · வெளிப்படுத்தின விசேஷம் 9:4 · எபிரெயர் 11:28 · I கொரிந்தியர் 10:10 · யாத்திராகமம் 12:12-13 · எசேக்கியேல் 9:6
24இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
Relatedயாத்திராகமம் 3:8 · யாத்திராகமம் 3:17 · உபாகமம் 12:8-9 · சங்கீதம் 105:44-45 · உபாகமம் 4:5 · உபாகமம் 16:5-9
26அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
Relatedயாத்திராகமம் 13:14-15 · உபாகமம் 32:7 · சங்கீதம் 145:4 · ஏசாயா 38:19 · சங்கீதம் 78:3-6 · யோசுவா 4:6-7
27இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
Relatedயாத்திராகமம் 4:31 · யாத்திராகமம் 12:11 · யாத்திராகமம் 12:23 · I கொரிந்தியர் 5:7 · யாத்திராகமம் 34:25 · I நாளாகமம் 29:20
28இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
Relatedஎபிரெயர் 11:28
29நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Relatedசங்கீதம் 78:51 · யாத்திராகமம் 4:23 · சங்கீதம் 105:36 · சங்கீதம் 135:8 · சங்கீதம் 136:10 · யாத்திராகமம் 11:4-5
30அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
31இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.
Relatedயாத்திராகமம் 6:1 · யாத்திராகமம் 3:19-20 · யாத்திராகமம் 10:9 · சங்கீதம் 105:38 · யாத்திராகமம் 8:8 · யாத்திராகமம் 11:8
32நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
Relatedயாத்திராகமம் 10:26 · ஆதியாகமம் 27:34 · ஆதியாகமம் 27:38 · யாத்திராகமம் 9:28 · யாத்திராகமம் 10:9 · யாத்திராகமம் 8:28
33எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
34பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
Relatedயாத்திராகமம் 8:3
35மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
36கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
Relatedஆதியாகமம் 15:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10 · யாத்திராகமம் 3:21-22 · சங்கீதம் 105:37 · யாத்திராகமம் 11:3 · தானியேல் 1:9
37இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாகப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 1:46 · யாத்திராகமம் 38:26 · எண்ணாகமம் 33:3 · எண்ணாகமம் 33:5 · எண்ணாகமம் 11:21 · ஆதியாகமம் 47:11
38அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
39எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
40இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
Relatedஆதியாகமம் 15:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:17 · எபிரெயர் 11:9 · கலாத்தியர் 3:16-17 · ஆதியாகமம் 12:1-3
41நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
Relatedயோவான் 7:8 · ஆபகூக் 2:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 · யாத்திராகமம் 7:4 · யாத்திராகமம் 12:51 · யோசுவா 5:14
42கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க இராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய இராத்திரி இதுவே.
43மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
44பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
Relatedயோவான் 19:36 · எண்ணாகமம் 9:12 · யோவான் 19:33 · எபேசியர் 2:19-22 · சங்கீதம் 34:20 · I கொரிந்தியர் 12:12
47இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
48அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம்.
Relatedஎண்ணாகமம் 9:14 · கொலோசெயர் 3:11 · எண்ணாகமம் 15:15-16 · கலாத்தியர் 3:28 · எசேக்கியேல் 47:22 · யாத்திராகமம் 12:19
49சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
Relatedஎண்ணாகமம் 15:15-16 · எண்ணாகமம் 15:29 · லேவியராகமம் 24:22 · எண்ணாகமம் 9:14 · கலாத்தியர் 3:28 · கொலோசெயர் 3:11
50இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
Relatedயாத்திராகமம் 6:26 · யோவான் 2:5 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · மத்தேயு 28:20 · யோவான் 13:17 · மத்தேயு 7:24-25
51அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS