உன்னதப்பாட்டு 3
Tamil Bible (BSI 1957) • 11 verses
1இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
RelatedI பேதுரு 1:8 · உன்னதப்பாட்டு 1:7 · உன்னதப்பாட்டு 5:6 · ஏசாயா 26:9 · ஏசாயா 55:6 · சங்கீதம் 130:1-2
2நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Relatedஎபேசியர் 5:14 · ரோமர் 13:11 · ஏசாயா 64:7 · நீதிமொழிகள் 8:34 · நீதிமொழிகள் 8:2-3 · சங்கீதம் 43:2-5
3நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
Relatedஉன்னதப்பாட்டு 5:7 · ஏசாயா 21:11-12 · யோவான் 20:15 · ஏசாயா 21:6-8 · எசேக்கியேல் 33:2-9 · எசேக்கியேல் 3:17
4நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
Relatedநீதிமொழிகள் 8:17 · உன்னதப்பாட்டு 6:12 · உன்னதப்பாட்டு 8:2 · நீதிமொழிகள் 4:13 · மத்தேயு 7:7 · எரேமியா 29:13
5எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
Relatedஉன்னதப்பாட்டு 8:5 · உன்னதப்பாட்டு 4:6 · வெளிப்படுத்தின விசேஷம் 12:14 · உன்னதப்பாட்டு 1:13 · உபாகமம் 8:2 · உன்னதப்பாட்டு 1:3
7இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
RelatedI இராஜாக்கள் 14:27 · II இராஜாக்கள் 6:17 · எபிரெயர் 1:14 · I சாமுவேல் 8:16 · உன்னதப்பாட்டு 3:9 · I சாமுவேல் 28:2
8இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
Relatedசங்கீதம் 45:3 · எபேசியர் 6:16-18 · நெகேமியா 4:21-22 · I தெசலோனிக்கேயர் 5:6-8 · ஏசாயா 27:3 · சங்கீதம் 149:5-9
9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
10அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.
Relatedசங்கீதம் 87:3 · உன்னதப்பாட்டு 1:5 · I தீமோத்தேயு 3:15-16 · வெளிப்படுத்தின விசேஷம் 3:12 · ரோமர் 5:8 · எபேசியர் 3:18-19
11சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.
Relatedஏசாயா 62:5 · எரேமியா 2:2 · ஓசியா 2:19-20 · வெளிப்படுத்தின விசேஷம் 1:7 · எபிரெயர் 13:13 · சங்கீதம் 9:14
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS