I தீமோத்தேயு 2
Tamil Bible (BSI 1957) • 15 verses
1நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;
RelatedII தெசலோனிக்கேயர் 1:3 · மத்தேயு 6:9-10 · யாக்கோபு 5:16 · சங்கீதம் 67:1-4 · எபேசியர் 5:20 · I தீமோத்தேயு 2:4
2நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
RelatedI பேதுரு 2:9-13 · எரேமியா 29:7 · எஸ்றா 6:10 · ரோமர் 13:1-7 · நீதிமொழிகள் 24:21 · I தெசலோனிக்கேயர் 4:11
3நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
Relatedஎபிரெயர் 13:16 · I பேதுரு 2:20 · I தீமோத்தேயு 1:1 · ரோமர் 14:18 · I பேதுரு 2:5 · கொலோசெயர் 1:10
4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
Relatedஎசேக்கியேல் 18:32 · II பேதுரு 3:9 · எசேக்கியேல் 18:23 · தீத்து 2:11 · எசேக்கியேல் 33:11 · யோவான் 3:15-17
5தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
RelatedI கொரிந்தியர் 8:6 · கலாத்தியர் 3:20 · எபிரெயர் 9:15 · எபிரெயர் 7:25 · உபாகமம் 6:4 · எபிரெயர் 12:24
6எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
Relatedமத்தேயு 20:28 · I பேதுரு 3:18 · I யோவான் 2:1-2 · I யோவான் 4:10 · கலாத்தியர் 4:4 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5
7இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · II தீமோத்தேயு 1:11 · ரோமர் 9:1 · எபேசியர் 3:7-8 · ரோமர் 15:16 · பிரசங்கி 12:8-10
8அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
9ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
RelatedI பேதுரு 3:3-5 · தீத்து 2:3-5 · சங்கீதம் 149:4 · எரேமியா 4:30 · ஏசாயா 3:16 · II இராஜாக்கள் 9:30
10தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
RelatedI பேதுரு 2:12 · I பேதுரு 3:3-5 · நீதிமொழிகள் 31:31 · வெளிப்படுத்தின விசேஷம் 2:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36 · எபேசியர் 2:10
11ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
RelatedI கொரிந்தியர் 14:34-35 · எபேசியர் 5:22-24 · I கொரிந்தியர் 11:3 · கொலோசெயர் 3:18 · I பேதுரு 3:5-6 · தீத்து 2:5
12உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
RelatedI கொரிந்தியர் 14:34
13என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
Relatedதீத்து 2:12 · ஆதியாகமம் 3:15-16 · I பேதுரு 4:7 · I தீமோத்தேயு 1:5 · I தீமோத்தேயு 2:9 · ஏசாயா 9:6
📖 I தீமோத்தேயுAll 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS