எசேக்கியேல் 7
Tamil Bible (BSI 1957) • 27 verses
1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
Relatedஆமோஸ் 8:2 · I பேதுரு 4:7 · எசேக்கியேல் 7:3 · ஆமோஸ் 8:10 · எசேக்கியேல் 11:13 · எசேக்கியேல் 7:5-6
3இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
Relatedஎசேக்கியேல் 18:30 · எசேக்கியேல் 5:13 · எசேக்கியேல் 16:38 · எசேக்கியேல் 33:20 · எசேக்கியேல் 7:8-9 · எசேக்கியேல் 7:27
4என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Relatedஎசேக்கியேல் 6:7 · எசேக்கியேல் 11:21 · எசேக்கியேல் 5:11 · எசேக்கியேல் 16:43 · எசேக்கியேல் 6:14 · எசேக்கியேல் 9:10
5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
RelatedII இராஜாக்கள் 21:12-13 · எசேக்கியேல் 5:9 · நாகூம் 1:9 · மத்தேயு 24:21 · தானியேல் 9:12 · ஆமோஸ் 3:2
6முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.
Relatedசகரியா 13:7 · எரேமியா 44:27 · எசேக்கியேல் 7:10 · எசேக்கியேல் 39:8 · II பேதுரு 2:5 · எசேக்கியேல் 7:3
7தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
Relatedஎசேக்கியேல் 7:12 · எசேக்கியேல் 12:28 · ஏசாயா 22:5 · எசேக்கியேல் 12:23-25 · ஆதியாகமம் 19:15 · ஏசாயா 13:22
8இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
Relatedஎசேக்கியேல் 9:8 · எசேக்கியேல் 14:19 · ஏசாயா 42:25 · எசேக்கியேல் 20:8 · எசேக்கியேல் 20:21 · நாகூம் 1:6
9என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புக்களுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
10இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
Relatedஏசாயா 10:5 · யாக்கோபு 4:6 · I தெசலோனிக்கேயர் 5:3 · நீதிமொழிகள் 16:18 · நீதிமொழிகள் 14:3 · சங்கீதம் 89:32
11அக்கிரமத்துக்கு மிலாறாகக்கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
Relatedசெப்பனியா 1:18 · எரேமியா 16:5-6 · எசேக்கியேல் 7:23 · ஏசாயா 59:6-8 · எசேக்கியேல் 7:16 · எசேக்கியேல் 5:11
12அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும்.
Relatedஏசாயா 5:13-14 · I கொரிந்தியர் 7:29-31 · எசேக்கியேல் 7:10 · ஏசாயா 24:1-2 · எசேக்கியேல் 7:5-7 · எரேமியா 32:7-8
13அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
Relatedலேவியராகமம் 25:24-28 · பிரசங்கி 8:8 · எசேக்கியேல் 13:22 · சங்கீதம் 52:7 · லேவியராகமம் 25:31 · யோபு 15:25
14அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.
15வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.
Relatedஎசேக்கியேல் 5:12 · எரேமியா 14:18 · புலம்பல் 1:20 · எரேமியா 15:2-3 · உபாகமம் 32:23-25 · எசேக்கியேல் 6:12
16அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
17எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
18இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
19தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
Relatedசெப்பனியா 1:18 · நீதிமொழிகள் 11:4 · எசேக்கியேல் 14:7 · லூக்கா 12:19-20 · ஏசாயா 2:20 · மத்தேயு 16:26
20அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டுபண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
Relatedஎசேக்கியேல் 24:21 · எரேமியா 7:30 · ஏசாயா 64:11 · எசேக்கியேல் 8:7-10 · எசேக்கியேல் 8:15-16 · எசேக்கியேல் 9:7
21அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
RelatedII இராஜாக்கள் 24:13 · சங்கீதம் 74:2-8 · எரேமியா 52:13-23 · II நாளாகமம் 36:18-19 · சங்கீதம் 79:1 · II இராஜாக்கள் 25:9
22என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
Relatedஎரேமியா 18:17 · சங்கீதம் 10:11 · சங்கீதம் 74:18-23 · எசேக்கியேல் 39:23-24 · சங்கீதம் 35:22 · சங்கீதம் 74:10-11
23ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Relatedஎசேக்கியேல் 9:9 · எரேமியா 27:2 · II இராஜாக்கள் 21:16 · ஓசியா 4:2 · எசேக்கியேல் 11:6 · ஏசாயா 59:7
24ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
Relatedஎசேக்கியேல் 28:7 · எசேக்கியேல் 33:28 · எசேக்கியேல் 21:31 · சங்கீதம் 106:41 · எசேக்கியேல் 21:2 · எரேமியா 6:12
25சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
Relatedஏசாயா 59:8-12 · புலம்பல் 4:17-18 · எரேமியா 8:15-16 · ஏசாயா 57:21 · எசேக்கியேல் 13:16 · மீகா 1:12
26விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.
Relatedஎரேமியா 4:20 · சங்கீதம் 74:9 · மீகா 3:6 · எசேக்கியேல் 14:1 · எசேக்கியேல் 20:1-3 · எரேமியா 37:17
27ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS