லேவியராகமம் 17
Tamil Bible (BSI 1957) • 16 verses
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
3இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
Relatedலேவியராகமம் 17:12-13 · லேவியராகமம் 17:8 · உபாகமம் 12:5-7 · உபாகமம் 12:11-15 · உபாகமம் 12:26-27 · உபாகமம் 12:20-22
4பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும் அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான்.
Relatedஏசாயா 66:3 · ஆதியாகமம் 17:14 · எசேக்கியேல் 20:40 · யோவான் 14:6 · உபாகமம் 12:5-21 · யோவான் 10:7
5ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
Relatedஆதியாகமம் 31:54 · யாத்திராகமம் 24:5 · ஆதியாகமம் 21:33 · ஆதியாகமம் 22:13 · II இராஜாக்கள் 17:10 · II இராஜாக்கள் 16:4
6அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
Relatedஎண்ணாகமம் 18:17 · லேவியராகமம் 3:2 · யாத்திராகமம் 29:18 · லேவியராகமம் 4:31 · லேவியராகமம் 3:5 · லேவியராகமம் 3:16
7தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
RelatedI கொரிந்தியர் 10:20 · யாத்திராகமம் 34:15 · II நாளாகமம் 11:15 · உபாகமம் 32:17 · சங்கீதம் 106:37 · லேவியராகமம் 20:5
8மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளையிட்டு,
Relatedலேவியராகமம் 1:2-3 · I சாமுவேல் 7:9 · I சாமுவேல் 10:8 · லேவியராகமம் 17:4 · II சாமுவேல் 24:25 · I இராஜாக்கள் 18:30-38
9அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
Relatedலேவியராகமம் 17:4
10இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
Relatedலேவியராகமம் 17:11 · உபாகமம் 12:23 · லேவியராகமம் 3:17 · உபாகமம் 12:16 · எரேமியா 44:11 · ஆதியாகமம் 9:4
11மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
Relatedஎபிரெயர் 9:22 · I யோவான் 1:7 · ரோமர் 3:25 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5 · மாற்கு 14:24 · மத்தேயு 26:28
12அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
Relatedயாத்திராகமம் 12:49
13இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
Relatedஉபாகமம் 12:16 · லேவியராகமம் 7:26 · உபாகமம் 12:24 · எசேக்கியேல் 24:7 · உபாகமம் 15:23 · I சாமுவேல் 14:32-34
14சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
15தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும் அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைச் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
Relatedயாத்திராகமம் 22:31 · லேவியராகமம் 22:8 · உபாகமம் 14:21 · லேவியராகமம் 11:25 · லேவியராகமம் 15:5 · எசேக்கியேல் 4:14
16அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS