யாத்திராகமம் 3
Tamil Bible (BSI 1957) • 22 verses
1மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்.
RelatedI இராஜாக்கள் 19:8 · சங்கீதம் 78:70-72 · யாத்திராகமம் 17:6 · எண்ணாகமம் 10:29 · மல்கியா 4:4 · யாத்திராகமம் 18:1-6
2அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:30-35 · ஏசாயா 43:2 · உபாகமம் 33:16 · மாற்கு 12:26 · லூக்கா 20:37 · சங்கீதம் 66:12
3அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான்.
4அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
Relatedஉபாகமம் 33:16 · I சாமுவேல் 3:6 · ஆதியாகமம் 22:11 · ஆதியாகமம் 46:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 · ஆதியாகமம் 22:1
5அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
Relatedயோசுவா 5:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:33 · யாத்திராகமம் 19:12 · பிரசங்கி 5:1 · ஆதியாகமம் 28:16-17 · எபிரெயர் 12:20
6பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
Relatedலூக்கா 20:37 · மத்தேயு 22:32 · மாற்கு 12:26 · யாத்திராகமம் 4:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:32 · ஆதியாகமம் 28:13
7அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 145:19 · சங்கீதம் 106:44 · யாத்திராகமம் 2:23-25 · சங்கீதம் 34:6 · நெகேமியா 9:9 · யாத்திராகமம் 22:23
8அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Relatedஆதியாகமம் 50:24 · யாத்திராகமம் 3:17 · ஆதியாகமம் 15:18-21 · யாத்திராகமம் 13:5 · உபாகமம் 1:25 · உபாகமம் 8:7-9
9இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
Relatedயாத்திராகமம் 2:23 · நீதிமொழிகள் 22:22-23 · யாத்திராகமம் 1:11 · யாத்திராகமம் 1:13-14 · யாத்திராகமம் 3:7 · யாத்திராகமம் 1:22
10நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
Relatedமீகா 6:4 · ஏசாயா 63:11-12 · சங்கீதம் 105:26 · I சாமுவேல் 12:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:34 · ஓசியா 12:13
11அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
RelatedI சாமுவேல் 18:18 · யாத்திராகமம் 6:12 · II கொரிந்தியர் 3:5 · எரேமியா 1:6 · II கொரிந்தியர் 2:16 · யாத்திராகமம் 4:10-13
12அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
Relatedயோசுவா 1:5 · ரோமர் 8:31 · உபாகமம் 31:23 · ஏசாயா 41:10 · யாத்திராகமம் 4:12 · யாத்திராகமம் 4:15
13அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
Relatedநீதிமொழிகள் 30:4 · ஏசாயா 9:6 · ஏசாயா 7:14 · ஆதியாகமம் 32:29 · மத்தேயு 1:21 · யாத்திராகமம் 3:14
14அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
Relatedயோவான் 8:58 · எபிரெயர் 13:8 · வெளிப்படுத்தின விசேஷம் 1:8 · சங்கீதம் 90:2 · ஏசாயா 44:6 · யாத்திராகமம் 6:3
15மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
16நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
Relatedசங்கீதம் 8:4 · யாத்திராகமம் 4:31 · யாத்திராகமம் 4:29 · ஆதியாகமம் 50:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:14 · யாத்திராகமம் 2:25
17நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
Relatedஆதியாகமம் 15:13-21 · ஆதியாகமம் 50:24 · யாத்திராகமம் 3:8-9 · யாத்திராகமம் 2:23-25 · யோசுவா 24:11 · ஆதியாகமம் 46:4
18அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
Relatedயாத்திராகமம் 9:1 · யாத்திராகமம் 7:16 · யாத்திராகமம் 10:24-26 · யாத்திராகமம் 10:3 · யாத்திராகமம் 9:13 · எண்ணாகமம் 23:15-16
19ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
Relatedயாத்திராகமம் 5:2 · யாத்திராகமம் 6:1 · சங்கீதம் 136:11-12 · ஏசாயா 63:12-13 · யாத்திராகமம் 7:1-14
20ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:36 · நெகேமியா 9:10 · உபாகமம் 6:22 · யாத்திராகமம் 9:15 · யாத்திராகமம் 6:6 · யாத்திராகமம் 12:31-33
21அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.
Relatedயாத்திராகமம் 12:36 · யாத்திராகமம் 11:3 · சங்கீதம் 105:37 · நீதிமொழிகள் 16:7 · சங்கீதம் 106:46 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10
22ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS