ஆதியாகமம் 22
Tamil Bible (BSI 1957) • 24 verses
1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
Relatedஎபிரெயர் 11:17 · உபாகமம் 8:2 · யாக்கோபு 2:21 · யாக்கோபு 1:12-14 · I கொரிந்தியர் 10:13 · I பேதுரு 1:7
2அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
Relatedயோவான் 3:16 · ரோமர் 8:32 · எபிரெயர் 11:17 · I யோவான் 4:9-10 · ஆதியாகமம் 22:16 · ஆதியாகமம் 22:12
3ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
Relatedசங்கீதம் 119:60 · மத்தேயு 10:37 · லூக்கா 14:26 · ஆதியாகமம் 17:23 · ஆதியாகமம் 21:14 · பிரசங்கி 9:10
4மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
Relatedஓசியா 6:2 · லூக்கா 13:32 · I கொரிந்தியர் 15:4 · மத்தேயு 17:23 · I சாமுவேல் 26:13 · II இராஜாக்கள் 20:5
5அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
6ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
7அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.
Relatedரோமர் 8:15 · யோவான் 18:11 · மத்தேயு 26:42 · மத்தேயு 26:39 · ஆதியாகமம் 4:2-4 · யாத்திராகமம் 12:3
8அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,
Relatedயோவான் 1:36 · யோவான் 1:29 · வெளிப்படுத்தின விசேஷம் 5:12 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · ஆதியாகமம் 18:14
9தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.
Relatedயாக்கோபு 2:21 · எபிரெயர் 11:17-19 · பிலிப்பியர் 2:7-8 · மத்தேயு 21:1-46 · I பேதுரு 2:24 · சங்கீதம் 118:27
10பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
11அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Relatedயாத்திராகமம் 3:4 · ஆதியாகமம் 21:17 · ஆதியாகமம் 22:16 · ஆதியாகமம் 16:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 · ஆதியாகமம் 22:1
12அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
Relatedயாக்கோபு 2:21-22 · யாக்கோபு 2:18 · I சாமுவேல் 15:22 · மத்தேயு 10:37-38 · ரோமர் 8:32 · மத்தேயு 19:29
13ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
RelatedI கொரிந்தியர் 10:13 · II கொரிந்தியர் 1:9-10 · சங்கீதம் 40:6-8 · ஆதியாகமம் 22:8 · சங்கீதம் 89:19-20 · I கொரிந்தியர் 5:7-8
14ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
Relatedஆதியாகமம் 22:13 · யாத்திராகமம் 17:15 · நியாயாதிபதிகள் 6:24 · ஆதியாகமம் 22:8 · ஆதியாகமம் 16:13-14 · சங்கீதம் 22:4-5
15கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:
16நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;
Relatedஎபிரெயர் 6:13-14 · லூக்கா 1:73 · சங்கீதம் 105:9 · எரேமியா 51:14 · எரேமியா 49:13 · ரோமர் 4:13-14
17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
Relatedஆதியாகமம் 15:5 · எரேமியா 33:22 · ஆதியாகமம் 24:60 · ஆதியாகமம் 26:4 · ஆதியாகமம் 13:16 · சங்கீதம் 72:8-9
18நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 3:25 · கலாத்தியர் 3:16 · ஆதியாகமம் 12:3 · ஆதியாகமம் 26:4-5 · கலாத்தியர் 3:8-9 · ஆதியாகமம் 18:18
19ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்.
20இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;
Relatedஆதியாகமம் 11:29 · ஆதியாகமம் 24:24 · ஆதியாகமம் 11:26 · ஆதியாகமம் 31:53 · ஆதியாகமம் 24:10 · ஆதியாகமம் 24:15
21அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
22கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.
23அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.
Relatedஆதியாகமம் 24:15 · ஆதியாகமம் 24:51 · ஆதியாகமம் 28:2 · ஆதியாகமம் 25:20 · ஆதியாகமம் 24:47 · ஆதியாகமம் 24:67
24ரேயுமாள் என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS