ஏசாயா 47
Tamil Bible (BSI 1957) • 15 verses
1பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.
2ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
Relatedமத்தேயு 24:41 · நியாயாதிபதிகள் 16:21 · ஏசாயா 20:4 · யாத்திராகமம் 11:5 · எசேக்கியேல் 16:37-39 · லூக்கா 17:35
3உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.
Relatedநாகூம் 3:5 · எரேமியா 51:20-24 · எரேமியா 50:27-28 · வெளிப்படுத்தின விசேஷம் 16:19 · எரேமியா 13:26 · எரேமியா 51:56
4எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.
5கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.
Relatedஏசாயா 47:7 · வெளிப்படுத்தின விசேஷம் 18:16-19 · ஆபகூக் 2:20 · சகரியா 2:13 · வெளிப்படுத்தின விசேஷம் 18:7 · ஏசாயா 47:1
6நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,
Relatedசகரியா 1:15 · II நாளாகமம் 28:9 · உபாகமம் 28:50 · ஒபதியா 1:10 · யாக்கோபு 2:13 · சங்கீதம் 69:26
7என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும்போனாய்.
8இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.
Relatedஏசாயா 32:9 · செப்பனியா 2:15 · ஏசாயா 47:10 · வெளிப்படுத்தின விசேஷம் 18:3-8 · ஏசாயா 45:6 · எரேமியா 50:11
9சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.
Relatedசங்கீதம் 73:19 · I தெசலோனிக்கேயர் 5:3 · நாகூம் 3:4 · ஏசாயா 47:12-13 · வெளிப்படுத்தின விசேஷம் 18:8-10 · எரேமியா 51:29
10உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.
11ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:3 · வெளிப்படுத்தின விசேஷம் 18:9-10 · தானியேல் 5:25-30 · வெளிப்படுத்தின விசேஷம் 3:3 · நெகேமியா 4:11 · யாத்திராகமம் 12:29-30
12நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:8-12 · நாகூம் 3:4 · எரேமியா 2:28 · ஏசாயா 47:9-10 · ஏசாயா 19:3 · வெளிப்படுத்தின விசேஷம் 17:4-6
13உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
Relatedஏசாயா 44:25 · எரேமியா 51:58 · ஏசாயா 57:10 · தானியேல் 2:2-10 · எசேக்கியேல் 24:12 · ஏசாயா 47:15
14இதோ, அவர்கள் தாளடியைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜூவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.
15உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS