எண்ணாகமம் 12
Tamil Bible (BSI 1957) • 16 verses
1எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
Relatedயாத்திராகமம் 2:21 · ஆதியாகமம் 26:34-35 · ஆதியாகமம் 27:46 · ஆதியாகமம் 24:37 · ஆதியாகமம் 34:14-15 · ஆதியாகமம் 28:6-9
2கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
Relatedஎசேக்கியேல் 35:12-13 · எண்ணாகமம் 16:3 · பிலிப்பியர் 2:3 · ஏசாயா 37:4 · மீகா 6:4 · பிலிப்பியர் 2:14
3மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
Relatedமத்தேயு 11:29 · யாக்கோபு 3:13 · மத்தேயு 5:5 · II கொரிந்தியர் 11:5 · II கொரிந்தியர் 12:11 · யாக்கோபு 3:2-3
4சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
5கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
6அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
RelatedI இராஜாக்கள் 3:5 · ஆதியாகமம் 31:10-11 · ஆதியாகமம் 46:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17-18 · லூக்கா 1:22 · தானியேல் 10:8
7என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
Relatedஎபிரெயர் 3:2-6 · சங்கீதம் 105:26 · யோசுவா 1:1 · I கொரிந்தியர் 4:2 · மத்தேயு 11:11 · மத்தேயு 11:9
8நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.
Relatedஉபாகமம் 34:10 · I கொரிந்தியர் 13:12 · யாத்திராகமம் 24:10-11 · லூக்கா 10:16 · யாத்திராகமம் 33:23 · யாத்திராகமம் 33:11
9கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
10மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.
Relatedஉபாகமம் 24:9 · II இராஜாக்கள் 5:27 · II நாளாகமம் 26:19-21 · யாத்திராகமம் 4:6 · II இராஜாக்கள் 15:5 · யாத்திராகமம் 33:7-10
11அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.
RelatedII சாமுவேல் 24:10 · II சாமுவேல் 19:19 · நீதிமொழிகள் 30:32 · சங்கீதம் 38:1-5 · I சாமுவேல் 15:24-25 · I சாமுவேல் 12:19
12தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.
Relatedசங்கீதம் 88:4-5 · I தீமோத்தேயு 5:6 · சங்கீதம் 58:8 · எபேசியர் 2:1-5 · யோபு 3:16 · I கொரிந்தியர் 15:8
13அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
Relatedயாக்கோபு 5:15 · லூக்கா 6:28 · ரோமர் 12:21 · யாத்திராகமம் 32:10-14 · எண்ணாகமம் 14:13-20 · மத்தேயு 5:44-45
14கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.
Relatedஉபாகமம் 25:9 · யோபு 30:10 · எண்ணாகமம் 5:2-3 · ஏசாயா 50:6 · லேவியராகமம் 13:45-46 · II நாளாகமம் 26:20-21
15அப்படியே மிரியாம் ஏழு நாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கபட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.
16பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
📖 எண்ணாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS