எசேக்கியேல் 47
Tamil Bible (BSI 1957) • 23 verses
1பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது புறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:1 · சகரியா 14:8 · யோவேல் 3:18 · ஏசாயா 55:1 · எசேக்கியேல் 47:12 · சங்கீதம் 46:4
2அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
3அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.
Relatedஎசேக்கியேல் 40:3 · லூக்கா 24:49 · சகரியா 2:1 · வெளிப்படுத்தின விசேஷம் 11:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:16-18
4பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
5பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
Relatedஆபகூக் 2:14 · ஏசாயா 11:9 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · வெளிப்படுத்தின விசேஷம் 7:9 · வெளிப்படுத்தின விசேஷம் 20:2-4 · தானியேல் 2:34-35
6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
Relatedஎசேக்கியேல் 44:5 · எசேக்கியேல் 40:4 · எசேக்கியேல் 8:6 · சகரியா 4:2 · எசேக்கியேல் 8:17 · எரேமியா 1:11-13
7நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
Relatedஎசேக்கியேல் 47:12 · வெளிப்படுத்தின விசேஷம் 22:2 · I இராஜாக்கள் 9:26 · ஆதியாகமம் 2:9-10 · II இராஜாக்கள் 2:13
8அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
Relatedயோசுவா 3:16 · உபாகமம் 3:17 · ஏசாயா 44:3-5 · II இராஜாக்கள் 2:19-22 · உபாகமம் 4:49 · ஏசாயா 35:7
9சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
10அப்பொழுது என்கேதி துவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
Relatedமத்தேயு 4:19 · எண்ணாகமம் 34:6 · சங்கீதம் 104:25 · யோவான் 21:3-11 · மத்தேயு 13:47-50 · எசேக்கியேல் 47:15
11ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
Relatedஉபாகமம் 29:23 · வெளிப்படுத்தின விசேஷம் 22:11 · சங்கீதம் 107:34 · எபிரெயர் 6:4-8 · எரேமியா 17:6 · II பேதுரு 2:19-22
12நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:2 · சங்கீதம் 1:3 · எசேக்கியேல் 47:7 · எரேமியா 17:8 · ஆதியாகமம் 2:9 · சங்கீதம் 92:12
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
Relatedஎசேக்கியேல் 48:4-6 · எண்ணாகமம் 34:2-12 · எரேமியா 3:18 · ஆதியாகமம் 48:5 · I நாளாகமம் 5:1 · எரேமியா 31:1
14சகோதரனோடே சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.
Relatedஆதியாகமம் 12:7 · எசேக்கியேல் 20:5-6 · எசேக்கியேல் 48:29 · எசேக்கியேல் 20:28 · எண்ணாகமம் 14:16 · ஆதியாகமம் 13:15
15தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
Relatedஎண்ணாகமம் 13:21 · II சாமுவேல் 8:8 · எசேக்கியேல் 48:1 · ஆதியாகமம் 14:15 · சகரியா 9:2 · எண்ணாகமம் 34:8
17அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடபுறம்.
18கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும், நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
Relatedஆதியாகமம் 13:10 · யோபு 40:23 · நியாயாதிபதிகள் 10:8 · ஆதியாகமம் 31:47 · எண்ணாகமம் 32:1 · ஆதியாகமம் 31:23
19தென்மூலையான தென்புறம் தாமார்துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும், ஆறுமட்டாகவும். பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது; இது தென்மூலையான தென்புறம்.
Relatedஎசேக்கியேல் 48:28 · உபாகமம் 32:51 · எண்ணாகமம் 34:5 · எண்ணாகமம் 20:13 · ஏசாயா 27:12 · உபாகமம் 33:8
20மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.
21இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.
22உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.
Relatedகொலோசெயர் 3:11 · எபேசியர் 3:6 · ரோமர் 10:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:18 · ஏசாயா 56:6-7 · ஏசாயா 14:1
23அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS