ஏசாயா 37
Tamil Bible (BSI 1957) • 38 verses
1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
RelatedII இராஜாக்கள் 19:1-37 · யோனா 3:5-6 · ஏசாயா 36:22-37:38 · யோபு 1:20-21 · II இராஜாக்கள் 22:11 · எஸ்றா 9:5
2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.
Relatedஏசாயா 1:1 · ஏசாயா 36:3 · II இராஜாக்கள் 22:12-14 · யோவேல் 1:13 · II நாளாகமம் 20:20 · II இராஜாக்கள் 18:18
3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.
4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
Relatedஏசாயா 1:9 · ஏசாயா 36:20 · சங்கீதம் 106:23 · ஏசாயா 10:22 · II இராஜாக்கள் 19:22-23 · யாக்கோபு 5:16
5இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
6அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
Relatedஏசாயா 7:4 · ஏசாயா 35:4 · மாற்கு 5:36 · II நாளாகமம் 20:15-20 · ஏசாயா 51:12-13 · II இராஜாக்கள் 22:15-20
7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
RelatedII நாளாகமம் 32:21 · ஏசாயா 31:8-9 · ஏசாயா 10:16-18 · ஏசாயா 37:36-38 · ஏசாயா 30:28-33 · ஏசாயா 29:5-8
8அசீரியா ராஜா லாகீசை விட்டுப்புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
Relatedயோசுவா 10:29 · யோசுவா 21:13 · எண்ணாகமம் 33:20-21 · II நாளாகமம் 21:10 · யோசுவா 12:11 · II இராஜாக்கள் 8:22
9அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.
Relatedஏசாயா 36:15 · II இராஜாக்கள் 18:5 · ஏசாயா 36:20 · II நாளாகமம் 32:7-8 · சங்கீதம் 22:8 · II நாளாகமம் 32:15-19
11இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
Relatedஏசாயா 36:18-20 · II இராஜாக்கள் 18:33-35 · ஏசாயா 10:7-14 · II இராஜாக்கள் 17:4-6 · ஏசாயா 37:18-19 · ஏசாயா 14:17
12என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
Relatedஆதியாகமம் 11:31 · II இராஜாக்கள் 19:12 · II இராஜாக்கள் 17:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:2 · II இராஜாக்கள் 18:11 · ஆதியாகமம் 12:1-4
13ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.
Relatedஎரேமியா 49:23 · II இராஜாக்கள் 17:30-31 · ஏசாயா 10:9 · II இராஜாக்கள் 19:13 · II இராஜாக்கள் 17:24 · II இராஜாக்கள் 18:34
14எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,
Relatedசங்கீதம் 123:1-4 · II இராஜாக்கள் 19:14 · சங்கீதம் 27:5 · I இராஜாக்கள் 8:28-30 · I இராஜாக்கள் 9:3 · சங்கீதம் 143:6
15கர்த்தரை நோக்கி:
RelatedII நாளாகமம் 20:6-12 · II சாமுவேல் 7:18-29 · தானியேல் 9:3-4 · I சாமுவேல் 7:8-9 · பிலிப்பியர் 4:6-7 · II இராஜாக்கள் 19:15-19
16சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
Relatedசங்கீதம் 99:1 · யாத்திராகமம் 25:22 · சங்கீதம் 86:10 · I சாமுவேல் 4:4 · சங்கீதம் 80:1 · ஏசாயா 44:24
17கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.
RelatedII நாளாகமம் 6:40 · சங்கீதம் 17:6 · I பேதுரு 3:12 · ஏசாயா 37:4 · சங்கீதம் 10:14-15 · சங்கீதம் 74:22
18கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
Relatedநாகூம் 2:11-12 · II இராஜாக்கள் 15:29 · II இராஜாக்கள் 17:24 · II இராஜாக்கள் 17:6 · II இராஜாக்கள் 16:9 · I நாளாகமம் 5:26
19அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.
20இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.
Relatedசங்கீதம் 46:10 · சங்கீதம் 83:17-18 · I இராஜாக்கள் 18:36-37 · சங்கீதம் 67:1-2 · மல்கியா 1:11 · ஏசாயா 42:8
21அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.
22அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
23யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
Relatedஎசேக்கியேல் 39:7 · தானியேல் 5:20-23 · ஏசாயா 17:7 · II தெசலோனிக்கேயர் 2:4 · தானியேல் 7:25 · ஏசாயா 41:16
24உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
25நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.
26நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:23 · I பேதுரு 2:8 · ஏசாயா 46:10-11 · ஏசாயா 10:15 · ஏசாயா 10:5-6
27அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.
Relatedசங்கீதம் 129:6 · சங்கீதம் 92:7 · எண்ணாகமம் 14:9 · சங்கீதம் 90:5-6 · சங்கீதம் 127:1-2 · ஏசாயா 19:16
28உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:13 · சங்கீதம் 139:1-11 · எரேமியா 23:23-24 · நீதிமொழிகள் 5:21 · நீதிமொழிகள் 15:3
29நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.
Relatedஏசாயா 10:12 · ஏசாயா 37:34 · எசேக்கியேல் 38:4 · ஏசாயா 30:28 · எசேக்கியேல் 29:4 · II இராஜாக்கள் 19:27-28
30உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
RelatedII இராஜாக்கள் 19:29 · யாத்திராகமம் 3:12 · II இராஜாக்கள் 20:9 · ஏசாயா 7:14 · I இராஜாக்கள் 13:3-5 · லேவியராகமம் 25:4-5
31யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
Relatedஏசாயா 27:6 · II இராஜாக்கள் 19:30-31 · சங்கீதம் 80:9 · ரோமர் 9:27 · ஏசாயா 10:20-22 · எரேமியா 44:28
32மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
33ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
Relatedஏசாயா 10:32-34 · எசேக்கியேல் 21:22 · ஏசாயா 17:14 · லூக்கா 19:43-44 · ஏசாயா 17:12 · II இராஜாக்கள் 19:32-35
34அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
35என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
RelatedII இராஜாக்கள் 20:6 · ஏசாயா 38:6 · ஏசாயா 31:5 · எரேமியா 33:15-16 · எரேமியா 23:5-6 · எபேசியர் 1:14
36அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
RelatedII இராஜாக்கள் 19:35 · ஏசாயா 10:12 · II சாமுவேல் 24:16 · I தெசலோனிக்கேயர் 5:2-3 · ஏசாயா 10:33-34 · ஏசாயா 31:8
37அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
38அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS