ஆதியாகமம் 13
Tamil Bible (BSI 1957) • 18 verses
1ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
RelatedII சாமுவேல் 24:7 · யோசுவா 10:40 · ஆதியாகமம் 12:9-20 · யோசுவா 18:5 · I சாமுவேல் 27:10 · ஆதியாகமம் 21:33
2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.
Relatedஆதியாகமம் 24:35 · சங்கீதம் 112:1-3 · நீதிமொழிகள் 10:22 · ஆதியாகமம் 26:12-13 · யோபு 22:21-25 · உபாகமம் 8:18
3அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
4தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Relatedஎரேமியா 29:12 · ஏசாயா 58:9 · எபேசியர் 6:18-19 · ஆதியாகமம் 12:7-8 · செப்பனியா 3:9 · சங்கீதம் 116:2
5ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
6அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
7ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
Relatedஆதியாகமம் 26:20 · ஆதியாகமம் 12:6 · யாக்கோபு 3:16 · I பேதுரு 2:12 · யாக்கோபு 4:1 · ஆதியாகமம் 34:30
8ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
RelatedI கொரிந்தியர் 6:6-7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:26 · சங்கீதம் 133:1 · I யோவான் 4:20-21 · I பேதுரு 4:8 · ஆதியாகமம் 11:27-31
9இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
Relatedஎபிரெயர் 12:14 · I பேதுரு 3:8-12 · ஆதியாகமம் 34:10 · ஆதியாகமம் 20:15 · சங்கீதம் 120:7 · ரோமர் 12:18
10அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Relatedஉபாகமம் 34:3 · ஏசாயா 51:3 · ஆதியாகமம் 14:8 · ஆதியாகமம் 2:8-10 · எசேக்கியேல் 28:13 · ஆதியாகமம் 14:2
11அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
Relatedஆதியாகமம் 13:9 · எபிரெயர் 10:25 · நீதிமொழிகள் 27:10 · I பேதுரு 2:17 · சங்கீதம் 119:63 · ஆதியாகமம் 13:14
12ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
Relatedஆதியாகமம் 19:29 · ஆதியாகமம் 19:1 · ஆதியாகமம் 14:12 · சங்கீதம் 26:5 · II பேதுரு 2:7-8 · ஆதியாகமம் 19:25
13சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகாபாவிகளுமாய் இருந்தார்கள்.
14லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
15நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
RelatedII நாளாகமம் 20:7 · ஆதியாகமம் 12:7 · ஆதியாகமம் 15:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:5 · ஆதியாகமம் 35:12 · சங்கீதம் 37:22
16உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
Relatedஆதியாகமம் 28:14 · எண்ணாகமம் 23:10 · ஆதியாகமம் 32:12 · யாத்திராகமம் 32:13 · ஆதியாகமம் 22:17 · I இராஜாக்கள் 3:8
17நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
18அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Relatedஆதியாகமம் 35:27 · ஆதியாகமம் 18:1 · ஆதியாகமம் 14:13 · ஆதியாகமம் 8:20 · ஆதியாகமம் 12:7-8 · சங்கீதம் 16:8
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS