லேவியராகமம் 4
Tamil Bible (BSI 1957) • 35 verses
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
Relatedசங்கீதம் 19:12 · எண்ணாகமம் 15:22-29 · எபிரெயர் 9:7 · லேவியராகமம் 4:27 · I சாமுவேல் 14:27 · லேவியராகமம் 5:15-18
3அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
Relatedலேவியராகமம் 9:2 · எபிரெயர் 7:27-28 · லேவியராகமம் 4:14 · II கொரிந்தியர் 5:21 · எபிரெயர் 5:3 · எஸ்றா 8:35
4அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரவாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
Relatedலேவியராகமம் 1:3-4 · லேவியராகமம் 16:21 · I பேதுரு 3:18 · ஏசாயா 53:6 · யாத்திராகமம் 29:10-11 · தானியேல் 9:26
5அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
6தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
Relatedலேவியராகமம் 14:18 · லேவியராகமம் 16:14 · லேவியராகமம் 26:18 · லேவியராகமம் 26:28 · லேவியராகமம் 26:24 · லேவியராகமம் 16:19
7பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
Relatedலேவியராகமம் 8:15 · லேவியராகமம் 9:9 · லேவியராகமம் 5:9 · லேவியராகமம் 4:34 · லேவியராகமம் 4:18 · லேவியராகமம் 16:18
8பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
Relatedலேவியராகமம் 3:3-5 · லேவியராகமம் 4:26 · லேவியராகமம் 4:35 · லேவியராகமம் 16:25 · ஏசாயா 53:10 · லேவியராகமம் 3:9-11
9இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,
Relatedலேவியராகமம் 3:4
10சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
11காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதன் குடல்களையும், அதன் சாணியையும்,
Relatedஎண்ணாகமம் 19:5 · யாத்திராகமம் 29:14 · லேவியராகமம் 9:8-11 · எபிரெயர் 13:11-13 · லேவியராகமம் 8:14-17 · லேவியராகமம் 6:30
12காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்.
Relatedஎபிரெயர் 13:11 · யாத்திராகமம் 29:14 · லேவியராகமம் 6:10-11 · லேவியராகமம் 16:27 · லேவியராகமம் 13:46 · எண்ணாகமம் 19:3
13இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
Relatedலேவியராகமம் 5:17 · லேவியராகமம் 5:2-5 · யோசுவா 7:11 · எபிரெயர் 10:26-29 · எண்ணாகமம் 15:24-29 · ஓசியா 5:15
14அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
15சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.
Relatedலேவியராகமம் 1:4 · லேவியராகமம் 8:14 · யாத்திராகமம் 24:9 · யாத்திராகமம் 24:1 · எண்ணாகமம் 11:25 · லேவியராகமம் 16:21
16அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
17தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
Relatedலேவியராகமம் 4:6-7
18ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
Relatedலேவியராகமம் 4:7
19அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
Relatedலேவியராகமம் 4:26 · சங்கீதம் 22:14 · லேவியராகமம் 5:6 · எபிரெயர் 1:3 · லேவியராகமம் 4:31 · லேவியராகமம் 6:7
20பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
Relatedஎண்ணாகமம் 15:25 · லேவியராகமம் 12:8 · எபிரெயர் 10:10-12 · ரோமர் 5:11 · I யோவான் 2:2 · எபிரெயர் 2:17
21பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
Relatedலேவியராகமம் 16:15 · மத்தேயு 20:28 · லேவியராகமம் 16:21 · II கொரிந்தியர் 5:21 · II நாளாகமம் 29:21-24 · I தீமோத்தேயு 2:5-6
22ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
Relatedலேவியராகமம் 4:2 · லேவியராகமம் 4:13 · லேவியராகமம் 4:27 · II சாமுவேல் 21:1-3 · எண்ணாகமம் 16:2 · யாத்திராகமம் 18:21
23தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
Relatedலேவியராகமம் 4:14 · ரோமர் 8:3 · லேவியராகமம் 5:4 · எண்ணாகமம் 28:15 · எண்ணாகமம் 29:19 · எண்ணாகமம் 7:28
24அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக்கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
Relatedலேவியராகமம் 3:8 · லேவியராகமம் 16:15 · லேவியராகமம் 6:25 · லேவியராகமம் 3:13 · லேவியராகமம் 4:3-35 · ஏசாயா 53:6
25அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
Relatedலேவியராகமம் 4:34 · லேவியராகமம் 4:30 · லேவியராகமம் 4:18 · லேவியராகமம் 4:7 · லேவியராகமம் 9:9 · ரோமர் 8:3-4
26அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
Relatedலேவியராகமம் 4:20 · எண்ணாகமம் 15:28 · லேவியராகமம் 3:5 · லேவியராகமம் 4:35 · லேவியராகமம் 4:31 · லேவியராகமம் 5:10
27சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
Relatedலேவியராகமம் 4:2 · எண்ணாகமம் 15:27 · லேவியராகமம் 4:13 · எண்ணாகமம் 5:6 · எண்ணாகமம் 15:29 · யாத்திராகமம் 12:49
28தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது. அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
Relatedலேவியராகமம் 4:23 · லேவியராகமம் 4:3 · லேவியராகமம் 4:32 · ரோமர் 8:3 · ஏசாயா 7:14 · கலாத்தியர் 4:4-5
29பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
Relatedலேவியராகமம் 4:24 · லேவியராகமம் 4:4 · லேவியராகமம் 4:15 · லேவியராகமம் 1:4 · லேவியராகமம் 4:33 · எபிரெயர் 10:4-14
30அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
Relatedலேவியராகமம் 4:34 · லேவியராகமம் 4:25 · லேவியராகமம் 4:7 · ரோமர் 8:3-4 · ரோமர் 10:4 · எபிரெயர் 2:10
31சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
Relatedலேவியராகமம் 4:26 · லேவியராகமம் 4:35 · ஆதியாகமம் 8:21 · லேவியராகமம் 1:9 · யாத்திராகமம் 29:18 · எஸ்றா 6:10
32அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
Relatedலேவியராகமம் 4:28 · I பேதுரு 2:22 · I பேதுரு 3:18 · I பேதுரு 2:24 · லேவியராகமம் 3:6-7 · யாத்திராகமம் 12:5
33அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.
34அப்பொழுது ஆசாரியன் அந்தப்பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
Relatedலேவியராகமம் 4:30 · லேவியராகமம் 4:25 · லேவியராகமம் 4:7 · ரோமர் 8:3 · ரோமர் 10:4 · எபிரெயர் 10:29
35சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதன் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS