லேவியராகமம் 9
Tamil Bible (BSI 1957) • 24 verses
1எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
Relatedமத்தேயு 28:1 · லேவியராகமம் 15:14 · லேவியராகமம் 14:23 · எண்ணாகமம் 6:10 · எசேக்கியேல் 43:26-27 · லேவியராகமம் 8:33
2ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
Relatedலேவியராகமம் 4:3 · யாத்திராகமம் 29:1 · லேவியராகமம் 8:18 · லேவியராகமம் 8:14 · II கொரிந்தியர் 5:21 · எபிரெயர் 7:27
3மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
Relatedஎஸ்றா 6:17 · லேவியராகமம் 4:23 · I பேதுரு 2:24 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · எஸ்றா 10:19 · தீத்து 2:14
4சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
Relatedயாத்திராகமம் 29:43 · லேவியராகமம் 9:6 · லேவியராகமம் 9:23 · எசேக்கியேல் 43:2 · லேவியராகமம் 6:14-23 · யாத்திராகமம் 19:11
5மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
6அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
Relatedலேவியராகமம் 9:23 · யாத்திராகமம் 24:16 · எசேக்கியேல் 43:2 · II நாளாகமம் 5:13-14 · யாத்திராகமம் 40:34-35 · யாத்திராகமம் 16:10
7மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
Relatedஎபிரெயர் 5:3 · எபிரெயர் 5:1 · எபிரெயர் 9:7 · லேவியராகமம் 4:3 · எபிரெயர் 7:27-28 · லேவியராகமம் 4:16-20
8அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
9ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
Relatedலேவியராகமம் 4:6-7 · லேவியராகமம் 8:15 · லேவியராகமம் 16:18 · எபிரெயர் 10:4-19 · லேவியராகமம் 9:18 · லேவியராகமம் 4:30
10பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,
Relatedலேவியராகமம் 3:3-5 · லேவியராகமம் 4:8-12 · லேவியராகமம் 8:16-17 · லேவியராகமம் 4:34-35 · சங்கீதம் 51:17 · ஏசாயா 57:15
11மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
Relatedலேவியராகமம் 8:17 · லேவியராகமம் 4:11-12 · லேவியராகமம் 16:27-28 · எபிரெயர் 13:11-12 · லேவியராகமம் 4:21
12பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
13சர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
Relatedலேவியராகமம் 8:21
15பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்கொன்று, முந்தினதைப் பலியிட்டது போல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
Relatedலேவியராகமம் 4:27-31 · லேவியராகமம் 9:3 · எபிரெயர் 5:3 · எபிரெயர் 2:17 · II கொரிந்தியர் 5:21 · எண்ணாகமம் 28:1-29
16சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு,
17போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
Relatedலேவியராகமம் 2:1-2 · லேவியராகமம் 9:1 · கலாத்தியர் 2:20 · யோவான் 6:53 · லேவியராகமம் 3:5 · யாத்திராகமம் 29:38-42
18பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
Relatedஎபேசியர் 2:14-17 · கொலோசெயர் 1:20 · ரோமர் 5:1 · லேவியராகமம் 7:11-18 · லேவியராகமம் 3:1-17 · ரோமர் 5:10
19காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
20கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
21மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
Relatedலேவியராகமம் 7:30-34 · லூக்கா 2:13 · யாத்திராகமம் 29:24 · I பேதுரு 4:11 · ஏசாயா 49:3 · லேவியராகமம் 7:24
22பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
23பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
Relatedலேவியராகமம் 9:6 · எண்ணாகமம் 16:19 · லூக்கா 1:21-22 · எண்ணாகமம் 16:42 · எபிரெயர் 9:24-28 · எண்ணாகமம் 14:10
24அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS