ஓசியா 8
Tamil Bible (BSI 1957) • 14 verses
1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
2எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
Relatedமத்தேயு 7:21 · தீத்து 1:16 · சங்கீதம் 78:34-37 · I யோவான் 2:4 · II இராஜாக்கள் 10:29 · II இராஜாக்கள் 10:16
3ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
Relatedசங்கீதம் 81:10-11 · புலம்பல் 3:66 · ஆமோஸ் 1:11 · உபாகமம் 28:25 · புலம்பல் 4:19 · சங்கீதம் 36:3
4அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
Relatedஓசியா 13:9-10 · II இராஜாக்கள் 15:10-30 · I இராஜாக்கள் 16:31 · ஓசியா 2:8 · ஓசியா 13:2 · I இராஜாக்கள் 12:16-20
5சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?
Relatedஓசியா 10:5 · எரேமியா 13:27 · நீதிமொழிகள் 1:22 · எரேமியா 4:14 · II இராஜாக்கள் 17:16-18 · உபாகமம் 32:22
6அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும்.
Relatedஆபகூக் 2:18 · ஏசாயா 44:9-20 · எரேமியா 10:3-9 · எரேமியா 10:14 · சங்கீதம் 106:19-20 · சங்கீதம் 115:4-8
7அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
8இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
Relatedஎரேமியா 22:28 · எரேமியா 51:34 · II தீமோத்தேயு 2:20-21 · ரோமர் 9:22 · புலம்பல் 2:2 · எரேமியா 50:17
9அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப் போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள்.
Relatedஎரேமியா 2:24 · எசேக்கியேல் 16:33-34 · ஓசியா 5:13 · ஓசியா 7:11 · II இராஜாக்கள் 15:19 · ஏசாயா 30:6
10அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.
Relatedஎசேக்கியேல் 16:37 · எசேக்கியேல் 26:7 · எசேக்கியேல் 23:22-26 · எரேமியா 42:2 · ஓசியா 10:10 · ஆகாய் 2:6
11எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
12என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
Relatedஉபாகமம் 4:6-8 · ரோமர் 7:12 · ரோமர் 3:1 · II இராஜாக்கள் 17:15-16 · நீதிமொழிகள் 22:20 · சங்கீதம் 50:17
13எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
14இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
📖 ஓசியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS