ஏசாயா 34
Tamil Bible (BSI 1957) • 17 verses
1ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
2சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
Relatedஎரேமியா 25:15-29 · செப்பனியா 3:8 · ஏசாயா 13:5 · ஆமோஸ் 1:1-2 · சகரியா 14:12-16 · யோவேல் 3:9-14
3அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.
Relatedயோவேல் 2:20 · எசேக்கியேல் 39:4 · ஏசாயா 34:7 · வெளிப்படுத்தின விசேஷம் 14:20 · வெளிப்படுத்தின விசேஷம் 16:3-4 · எசேக்கியேல் 35:6
4வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 6:13-14 · மத்தேயு 24:29 · எசேக்கியேல் 32:7-8 · யோவேல் 3:15 · சங்கீதம் 102:25-26 · மாற்கு 13:24-25
5வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.
Relatedஎரேமியா 46:10 · ஏசாயா 63:1 · மல்கியா 1:4 · ஆமோஸ் 1:11-12 · எசேக்கியேல் 25:12-14 · எரேமியா 49:7-22
6போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
7அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போகும்.
Relatedஎண்ணாகமம் 23:22 · சங்கீதம் 68:30 · எரேமியா 50:27 · எண்ணாகமம் 24:8 · யோபு 39:9-10 · சங்கீதம் 92:10
8அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.
9அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
Relatedஉபாகமம் 29:23 · சங்கீதம் 11:6 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · ஆதியாகமம் 19:28 · யூதா 1:7 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8
10இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:3 · மல்கியா 1:3-4 · ஏசாயா 66:24 · ஏசாயா 13:20 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10-11 · எசேக்கியேல் 29:11
11நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
RelatedII இராஜாக்கள் 21:13 · புலம்பல் 2:8 · செப்பனியா 2:14 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2 · ஏசாயா 14:23 · II சாமுவேல் 8:2
12ராஜ்யபாரம்பண்ண அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
Relatedஏசாயா 3:6-8 · எரேமியா 39:6 · I கொரிந்தியர் 13:2 · எரேமியா 27:20 · II கொரிந்தியர் 12:11 · I கொரிந்தியர் 8:4
13அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.
14அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
Relatedஏசாயா 13:21-22
15அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.
Relatedஉபாகமம் 14:13
16கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
17அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS