ஏசாயா 12
Tamil Bible (BSI 1957) • 6 verses
1அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Relatedயாத்திராகமம் 15:2 · சங்கீதம் 118:14 · சங்கீதம் 27:1 · வெளிப்படுத்தின விசேஷம் 7:10 · ஏசாயா 26:3-4 · யோனா 2:9
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:1 · வெளிப்படுத்தின விசேஷம் 22:17 · எரேமியா 2:13 · யோவான் 4:10-14 · வெளிப்படுத்தின விசேஷம் 7:17 · யோவான் 7:37-39
4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
Relatedசங்கீதம் 105:1 · சங்கீதம் 145:4-6 · I நாளாகமம் 29:11 · யோவான் 17:26 · சங்கீதம் 117:1-2 · பிலிப்பியர் 2:9-11
5கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
Relatedசங்கீதம் 98:1 · யாத்திராகமம் 15:1 · ஆபகூக் 2:14 · ஏசாயா 40:9 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · யாத்திராகமம் 15:21
6சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS