எசேக்கியேல் 29
Tamil Bible (BSI 1957) • 21 verses
1பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Relatedஎசேக்கியேல் 26:1 · எசேக்கியேல் 29:17 · எசேக்கியேல் 20:1 · எசேக்கியேல் 8:1 · எசேக்கியேல் 40:1 · எசேக்கியேல் 1:2
2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
Relatedஎசேக்கியேல் 6:2 · எரேமியா 46:2-16 · எரேமியா 44:30 · ஏசாயா 18:1-19:17 · எரேமியா 25:18-19 · எசேக்கியேல் 21:2
3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
Relatedஏசாயா 27:1 · எசேக்கியேல் 32:2 · எரேமியா 44:30 · உபாகமம் 8:17 · எசேக்கியேல் 29:9-10 · எசேக்கியேல் 28:22
4உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
RelatedII இராஜாக்கள் 19:28 · எசேக்கியேல் 38:4 · ஆமோஸ் 4:2 · யோபு 41:1-2 · ஏசாயா 37:29 · ஆபகூக் 1:14-15
5உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
Relatedஎரேமியா 7:33 · எரேமியா 34:20 · எரேமியா 8:2 · எசேக்கியேல் 32:4-6 · எரேமியா 25:33 · சங்கீதம் 110:5-6
6அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
Relatedஏசாயா 36:6 · II இராஜாக்கள் 18:21 · யாத்திராகமம் 9:14 · யாத்திராகமம் 14:18 · ஏசாயா 20:5-6 · எசேக்கியேல் 28:26
7அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகப்பண்ணுவாய்.
Relatedஏசாயா 36:6 · எசேக்கியேல் 17:15-17 · எரேமியா 17:5-6 · சங்கீதம் 146:3-4 · சங்கீதம் 118:8-9 · நீதிமொழிகள் 25:19
8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
Relatedஎசேக்கியேல் 14:17 · ஆதியாகமம் 6:7 · எரேமியா 7:20 · எசேக்கியேல் 32:10-13 · யாத்திராகமம் 12:12 · எசேக்கியேல் 29:19-20
9எகிப்துதேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்: நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.
Relatedஎசேக்கியேல் 29:3 · எசேக்கியேல் 29:10-12 · நீதிமொழிகள் 18:12 · நீதிமொழிகள் 16:18 · எசேக்கியேல் 30:7-8 · நீதிமொழிகள் 29:23
10ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
Relatedஎசேக்கியேல் 30:12 · ஆபகூக் 3:8 · யாத்திராகமம் 14:2 · எசேக்கியேல் 30:6-9 · எசேக்கியேல் 29:11 · எரேமியா 46:14
11மனுஷனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
Relatedஎசேக்கியேல் 32:13 · எரேமியா 43:11-12 · ஏசாயா 23:17 · எசேக்கியேல் 36:28 · ஏசாயா 23:15 · II நாளாகமம் 36:21
12எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
Relatedஎசேக்கியேல் 30:7 · எரேமியா 46:19 · எசேக்கியேல் 30:23 · எசேக்கியேல் 30:26 · எரேமியா 25:15-19 · எரேமியா 27:6-11
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
14எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜனன தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
15அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.
Relatedசகரியா 10:11 · எசேக்கியேல் 30:13 · நாகூம் 3:8-9 · எசேக்கியேல் 17:14 · எசேக்கியேல் 31:2 · எசேக்கியேல் 32:2
16அவர்களின் பிறகேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
Relatedஓசியா 8:13 · எசேக்கியேல் 29:6-7 · ஏசாயா 20:5 · எரேமியா 14:10 · சங்கீதம் 25:7 · எரேமியா 2:36-37
17இருபத்தேழாம்வருஷம் முதலாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோளும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினால் அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
19ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.
Relatedஎரேமியா 43:10-13 · எசேக்கியேல் 30:24-25 · எசேக்கியேல் 32:11 · எசேக்கியேல் 30:10-12 · எசேக்கியேல் 30:4 · எசேக்கியேல் 29:8-10
20அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
21அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.
Relatedலூக்கா 21:15 · சங்கீதம் 132:17 · I சாமுவேல் 2:10 · ஆமோஸ் 3:7-8 · எசேக்கியேல் 24:27 · சங்கீதம் 92:10
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS