ஆமோஸ் 7
Tamil Bible (BSI 1957) • 17 verses
1கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
2அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
Relatedஏசாயா 37:4 · எசேக்கியேல் 11:13 · எரேமியா 14:20-21 · யாத்திராகமம் 10:15 · எசேக்கியேல் 9:8 · எரேமியா 14:7
3கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
4கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
Relatedஏசாயா 66:15-16 · ஆமோஸ் 7:1 · யோவேல் 2:30 · எண்ணாகமம் 16:35 · ஆமோஸ் 7:7 · வெளிப்படுத்தின விசேஷம் 4:1
5அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
6கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
Relatedநியாயாதிபதிகள் 2:18 · யோனா 3:10 · சங்கீதம் 135:14 · எரேமியா 26:19 · சங்கீதம் 90:13 · நியாயாதிபதிகள் 10:16
7பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
RelatedII இராஜாக்கள் 21:13 · ஏசாயா 28:17 · வெளிப்படுத்தின விசேஷம் 21:15 · வெளிப்படுத்தின விசேஷம் 11:1 · சகரியா 2:1-2 · ஏசாயா 34:11
8கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
9ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.
RelatedII இராஜாக்கள் 15:8-10 · ஆதியாகமம் 46:1 · ஆமோஸ் 3:14 · லேவியராகமம் 26:30-31 · ஆமோஸ் 8:14 · ஆதியாகமம் 26:23-25
10அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
Relatedஎரேமியா 38:4 · I இராஜாக்கள் 12:31-32 · மத்தேயு 21:23 · எரேமியா 26:8-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5 · லூக்கா 23:2
11எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
RelatedII இராஜாக்கள் 17:6 · ஆமோஸ் 6:7-8 · ஆமோஸ் 7:9 · சங்கீதம் 56:5 · மத்தேயு 26:61 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14
12அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
Relatedமத்தேயு 8:34 · I கொரிந்தியர் 2:14 · I சாமுவேல் 9:9 · ரோமர் 16:18 · ஏசாயா 30:10 · எசேக்கியேல் 13:19
13பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
RelatedI இராஜாக்கள் 12:32 · ஆமோஸ் 2:12 · I இராஜாக்கள் 12:29 · I இராஜாக்கள் 13:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:28
14ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
Relatedஆமோஸ் 1:1 · சகரியா 13:5 · I கொரிந்தியர் 1:27 · II இராஜாக்கள் 4:38 · II இராஜாக்கள் 2:5 · II நாளாகமம் 19:2
15ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
RelatedII சாமுவேல் 7:8 · எசேக்கியேல் 2:3-4 · மத்தேயு 9:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 · சங்கீதம் 78:70-72
16இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
Relatedஎசேக்கியேல் 20:46 · மீகா 2:6 · எசேக்கியேல் 21:2 · ஆமோஸ் 7:13 · எரேமியா 28:15-17 · உபாகமம் 32:2
17இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Relatedஓசியா 9:3 · II இராஜாக்கள் 17:6 · எரேமியா 28:16 · எசேக்கியேல் 4:13 · ஓசியா 4:13-14 · ஆமோஸ் 7:11
📖 ஆமோஸ்All 9 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS