ஆதியாகமம் 16
Tamil Bible (BSI 1957) • 16 verses
1ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
Relatedகலாத்தியர் 4:24 · ஆதியாகமம் 12:16 · ஆதியாகமம் 21:9-10 · ஆதியாகமம் 15:2-3 · ஆதியாகமம் 21:21 · ஆதியாகமம் 21:12
2சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
Relatedயாத்திராகமம் 21:4 · ஆதியாகமம் 18:10 · ஆதியாகமம் 3:17 · ஆதியாகமம் 3:1-6 · ஆதியாகமம் 30:9-10 · ஆதியாகமம் 25:21
3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
Relatedஆதியாகமம் 12:4-5 · ஆதியாகமம் 16:5 · II சாமுவேல் 5:13 · ஆதியாகமம் 30:9 · ஆதியாகமம் 25:6 · ஆதியாகமம் 35:22
4அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.
Relatedநீதிமொழிகள் 30:23 · II சாமுவேல் 6:16 · I கொரிந்தியர் 4:6 · நீதிமொழிகள் 30:20-21 · I சாமுவேல் 1:6-8 · I கொரிந்தியர் 13:4-5
5அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்பாராக என்றாள்.
Relatedஆதியாகமம் 31:53 · யாத்திராகமம் 5:21 · சங்கீதம் 7:8 · லூக்கா 10:40-41 · I சாமுவேல் 24:12-15 · சங்கீதம் 35:23
6அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.
Relatedஎரேமியா 38:5 · யாத்திராகமம் 2:15 · ஆதியாகமம் 24:10 · நீதிமொழிகள் 29:19 · ஆதியாகமம் 13:8-9 · நீதிமொழிகள் 14:29
7கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
Relatedஆதியாகமம் 21:17 · ஆதியாகமம் 25:18 · யாத்திராகமம் 15:22 · நீதிமொழிகள் 15:3 · I சாமுவேல் 15:7 · ஆதியாகமம் 22:11
8சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
Relatedஆதியாகமம் 3:9 · ஆதியாகமம் 4:10 · எரேமியா 2:17-18 · பிரசங்கி 10:4 · I தீமோத்தேயு 6:1-2 · எபேசியர் 6:5-8
9அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
RelatedI பேதுரு 5:5-6 · எபேசியர் 6:5-6 · தீத்து 2:9 · பிரசங்கி 10:4 · எபேசியர் 5:21 · I பேதுரு 2:18-25
10பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
Relatedஆதியாகமம் 17:20 · சங்கீதம் 83:6-7 · ஆதியாகமம் 21:13 · ஆதியாகமம் 25:12-18 · ஆதியாகமம் 22:15-18 · ஆதியாகமம் 21:18
11பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
Relatedயாத்திராகமம் 2:23-24 · யாத்திராகமம் 3:7 · ஏசாயா 7:14 · I சாமுவேல் 1:20 · ஆதியாகமம் 17:19 · ஆதியாகமம் 41:51-52
12அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
13அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
Relatedசங்கீதம் 139:1-12 · ஆதியாகமம் 32:30 · நீதிமொழிகள் 15:3 · நீதிமொழிகள் 5:21 · ஆதியாகமம் 16:7 · ஆதியாகமம் 31:42
14ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
15ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
Relatedஆதியாகமம் 25:12 · ஆதியாகமம் 37:27 · ஆதியாகமம் 17:18 · ஆதியாகமம் 17:25-26 · I நாளாகமம் 1:28 · ஆதியாகமம் 16:11
16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS