ஆதியாகமம் 37
Tamil Bible (BSI 1957) • 36 verses
1யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
2யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
Relatedஆதியாகமம் 35:25-26 · ஆதியாகமம் 35:22 · I சாமுவேல் 2:22-24 · I கொரிந்தியர் 11:18 · ஆதியாகமம் 30:9 · I கொரிந்தியர் 1:11
3இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Relatedயோவான் 3:35 · ஆதியாகமம் 37:32 · ஆதியாகமம் 37:23 · யோவான் 13:22-23 · II சாமுவேல் 13:18 · ஆதியாகமம் 44:20-30
4அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
Relatedஆதியாகமம் 27:41 · I யோவான் 3:12 · I யோவான் 4:20 · சங்கீதம் 69:4 · I யோவான் 2:11 · ஆதியாகமம் 37:5
5யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
6அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
7நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
Relatedஆதியாகமம் 42:6 · ஆதியாகமம் 44:14 · ஆதியாகமம் 43:26 · ஆதியாகமம் 42:9 · கொலோசெயர் 1:18 · பிலிப்பியர் 2:10
8அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:35 · I சாமுவேல் 10:27 · ஆதியாகமம் 49:26 · I சாமுவேல் 17:28 · லூக்கா 20:17 · ஆதியாகமம் 37:4
9அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9-14 · ஆதியாகமம் 46:29 · தானியேல் 8:10 · ஆதியாகமம் 37:7 · பிலிப்பியர் 2:15 · ஆதியாகமம் 50:15-21
10இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான்.
11அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9 · லூக்கா 2:51 · லூக்கா 2:19 · தானியேல் 7:28 · கலாத்தியர் 5:21 · ஏசாயா 26:11
12பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
13அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
Relatedஎபேசியர் 6:1-3 · ஆதியாகமம் 27:18 · ஆதியாகமம் 27:1 · மத்தேயு 10:16 · I சாமுவேல் 17:17-20 · ஆதியாகமம் 22:1
14அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
Relatedஆதியாகமம் 35:27 · லூக்கா 19:42 · சங்கீதம் 125:5 · எரேமியா 29:7 · ஆதியாகமம் 23:2 · I இராஜாக்கள் 2:33
15அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
Relatedநியாயாதிபதிகள் 4:22 · யோவான் 4:27 · ஆதியாகமம் 21:14 · யோவான் 18:4 · யோவான் 1:38 · யோவான் 18:7
16அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
17அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
RelatedII இராஜாக்கள் 6:13
18அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12 · சங்கீதம் 37:32 · சங்கீதம் 37:12 · மாற்கு 14:1 · I சாமுவேல் 19:1 · யோவான் 11:53
19ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
20நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
Relatedதீத்து 3:3 · நீதிமொழிகள் 27:4 · II இராஜாக்கள் 2:24 · மத்தேயு 2:2-16 · நீதிமொழிகள் 1:11-12 · I சாமுவேல் 26:2
21ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
22அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
Relatedஆதியாகமம் 22:12 · ஆதியாகமம் 42:22 · உபாகமம் 13:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 · மத்தேயு 27:24 · யாத்திராகமம் 24:11
23யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
24அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
Relatedஎரேமியா 38:6 · சங்கீதம் 130:1-2 · சகரியா 9:11 · சங்கீதம் 88:8 · சங்கீதம் 35:7 · புலம்பல் 3:52-55
25பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
Relatedஆதியாகமம் 37:28 · எரேமியா 8:22 · ஆதியாகமம் 43:11 · எரேமியா 46:11 · ஆதியாகமம் 16:11-12 · ஆதியாகமம் 31:23
26அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
Relatedஆதியாகமம் 37:20 · ஆதியாகமம் 4:10 · II சாமுவேல் 1:16 · யோபு 16:18 · எசேக்கியேல் 24:7 · எரேமியா 41:8
27அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.
Relatedஆதியாகமம் 42:21 · மத்தேயு 16:26 · I சாமுவேல் 18:17 · II சாமுவேல் 11:14-17 · ஆதியாகமம் 29:14 · மத்தேயு 26:15
28அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9 · சங்கீதம் 105:17 · ஆதியாகமம் 45:4-5 · ஆதியாகமம் 25:2 · ஆதியாகமம் 37:25 · நியாயாதிபதிகள் 6:1-3
29பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
Relatedயோபு 1:20 · ஆதியாகமம் 37:34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14 · யோவேல் 2:13 · ஆதியாகமம் 44:13 · எண்ணாகமம் 14:6
30தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
32பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
33யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி,
Relatedஆதியாகமம் 44:28 · ஆதியாகமம் 37:20 · நீதிமொழிகள் 14:15 · யோவான் 13:7 · I இராஜாக்கள் 13:24 · II இராஜாக்கள் 2:24
34தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
Relatedஆதியாகமம் 37:29 · II சாமுவேல் 3:31 · I நாளாகமம் 21:16 · I இராஜாக்கள் 21:27 · எஸ்தர் 4:1-3 · மத்தேயு 26:65
35அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
Relatedஆதியாகமம் 42:38 · யோபு 2:11 · II சாமுவேல் 12:17 · சங்கீதம் 77:2 · ஆதியாகமம் 45:28 · ஆதியாகமம் 42:31
36அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS