ஆதியாகமம் 46
Tamil Bible (BSI 1957) • 34 verses
1இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.
Relatedஆதியாகமம் 28:10 · ஆதியாகமம் 21:33 · ஆதியாகமம் 28:13 · ஆதியாகமம் 26:22-25 · ஆதியாகமம் 31:42 · ஆதியாகமம் 21:31
2அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
Relatedஆதியாகமம் 15:1 · யோபு 33:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 · ஆதியாகமம் 31:11 · ஆதியாகமம் 15:13 · தானியேல் 2:19
3அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.
Relatedஆதியாகமம் 12:2 · உபாகமம் 26:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:24 · ஏசாயா 43:1-2 · ஆதியாகமம் 26:2-3 · ஆதியாகமம் 28:13-14
4நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.
Relatedஆதியாகமம் 28:15 · யாத்திராகமம் 3:8 · ஆதியாகமம் 48:21 · ஆதியாகமம் 50:1 · ஆதியாகமம் 50:24-25 · ஆதியாகமம் 15:14-16
5அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,
Relatedஆதியாகமம் 45:19 · ஆதியாகமம் 45:21 · ஆதியாகமம் 45:27 · யாத்திராகமம் 10:24 · ஆதியாகமம் 31:17-18 · யாத்திராகமம் 10:26
6தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.
Relatedயோசுவா 24:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:15 · சங்கீதம் 105:23 · ஏசாயா 52:4 · உபாகமம் 26:5 · உபாகமம் 10:22
7அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.
8எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.
RelatedI நாளாகமம் 2:1-55 · உபாகமம் 33:6 · யாத்திராகமம் 1:1-5 · ஆதியாகமம் 29:1-30 · யாத்திராகமம் 6:14-18 · எண்ணாகமம் 26:4-11
9ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
10சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
Relatedயாத்திராகமம் 6:15 · ஆதியாகமம் 29:33 · எண்ணாகமம் 1:6 · எண்ணாகமம் 26:12-13 · ஆதியாகமம் 34:25 · I நாளாகமம் 2:1
11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Relatedஆதியாகமம் 29:34 · I நாளாகமம் 2:16 · I நாளாகமம் 6:16 · I நாளாகமம் 22:1-19 · எண்ணாகமம் 8:1-26 · I நாளாகமம் 6:1-3
12யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Relatedஆதியாகமம் 38:10 · ஆதியாகமம் 29:35 · ஆதியாகமம் 38:7 · I நாளாகமம் 4:21 · மத்தேயு 1:1-3 · ஆதியாகமம் 38:1-3
13இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
RelatedI நாளாகமம் 12:32 · I நாளாகமம் 2:1 · எண்ணாகமம் 1:28-30 · ஆதியாகமம் 35:23 · உபாகமம் 33:18 · எண்ணாகமம் 1:8
14செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Relatedஎண்ணாகமம் 26:26-27 · I நாளாகமம் 2:1 · உபாகமம் 33:18-19 · எண்ணாகமம் 1:30-31 · எண்ணாகமம் 1:9 · ஆதியாகமம் 30:19-20
15இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்றுபேர்.
Relatedஆதியாகமம் 29:32-35 · ஆதியாகமம் 30:17-21 · I நாளாகமம் 2:1 · ஆதியாகமம் 49:3-15 · ஆதியாகமம் 34:1-31 · ஆதியாகமம் 25:20
16காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
Relatedஎண்ணாகமம் 26:15-17 · ஆதியாகமம் 30:11 · எண்ணாகமம் 1:24-25 · ஆதியாகமம் 49:19 · I நாளாகமம் 5:11-16 · ஆதியாகமம் 35:26
17ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
Relatedஆதியாகமம் 30:13 · ஆதியாகமம் 49:20 · I நாளாகமம் 7:30-40 · I நாளாகமம் 2:2 · ஆதியாகமம் 35:26 · எண்ணாகமம் 1:13
18இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய வேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
19யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
Relatedஆதியாகமம் 44:27 · ஆதியாகமம் 29:18 · ஆதியாகமம் 47:1-31 · யாத்திராகமம் 1:3 · எண்ணாகமம் 1:36-37 · ஆதியாகமம் 39:1-40:23
20யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
Relatedஆதியாகமம் 41:50-52 · ஆதியாகமம் 41:45 · I நாளாகமம் 7:14-29 · ஆதியாகமம் 48:20 · எண்ணாகமம் 26:28-37 · உபாகமம் 33:13-17
21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
RelatedI நாளாகமம் 7:6-12 · உபாகமம் 33:12 · எண்ணாகமம் 1:36-37 · I நாளாகமம் 8:1-7 · எண்ணாகமம் 1:11 · எண்ணாகமம் 26:38-40
22ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.
23தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
Relatedஎண்ணாகமம் 1:38-39 · உபாகமம் 33:22 · எண்ணாகமம் 10:25 · ஆதியாகமம் 35:25 · எண்ணாகமம் 26:42-43 · I நாளாகமம் 12:35
24நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
RelatedI நாளாகமம் 7:13 · II இராஜாக்கள் 15:29 · ஆதியாகமம் 35:25 · உபாகமம் 33:23 · ஆதியாகமம் 49:21 · எண்ணாகமம் 1:42-43
25இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.
26யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.
27யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
28கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.
Relatedஆதியாகமம் 45:10 · ஆதியாகமம் 31:21 · ஆதியாகமம் 46:34-47:1 · ஆதியாகமம் 43:8 · ஆதியாகமம் 44:16-34 · ஆதியாகமம் 49:8
29யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.
Relatedலூக்கா 15:20 · ஆதியாகமம் 33:4 · ஆதியாகமம் 45:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:37 · ஆதியாகமம் 41:43 · ஆதியாகமம் 45:21
30அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
31பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
32அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
Relatedஆதியாகமம் 47:3 · ஆதியாகமம் 46:34 · ஆதியாகமம் 31:18 · யாத்திராகமம் 3:1 · ஏசாயா 40:11 · I சாமுவேல் 17:15
33பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,
34நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS