யாத்திராகமம் 19
Tamil Bible (BSI 1957) • 25 verses
1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
Relatedயாத்திராகமம் 16:1 · யாத்திராகமம் 12:6 · லேவியராகமம் 23:16-18 · எண்ணாகமம் 33:15 · யாத்திராகமம் 12:2
2அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
Relatedயாத்திராகமம் 3:1 · யாத்திராகமம் 17:1 · யாத்திராகமம் 3:12 · யாத்திராகமம் 18:5 · யாத்திராகமம் 17:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38
3மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
Relatedயாத்திராகமம் 3:4 · உபாகமம் 5:5-31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38 · யாத்திராகமம் 20:21 · யாத்திராகமம் 24:15-18 · யாத்திராகமம் 34:2
4நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
Relatedஏசாயா 63:9 · உபாகமம் 32:11-12 · ஏசாயா 40:31 · உபாகமம் 29:2 · வெளிப்படுத்தின விசேஷம் 12:14 · உபாகமம் 4:33-36
5இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Relatedஉபாகமம் 14:2 · உபாகமம் 7:6 · உபாகமம் 26:18 · மல்கியா 3:17 · யாத்திராகமம் 15:26 · சங்கீதம் 135:4
6நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 5:10 · I பேதுரு 2:9 · I பேதுரு 2:5 · உபாகமம் 7:6 · வெளிப்படுத்தின விசேஷம் 1:6 · உபாகமம் 28:9
7மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
8அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.
Relatedயாத்திராகமம் 24:7 · யாத்திராகமம் 24:3 · யோசுவா 24:24 · உபாகமம் 5:27-29 · யாத்திராகமம் 20:19 · நெகேமியா 10:29
9அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
Relatedஉபாகமம் 4:36 · யாத்திராகமம் 19:16 · யாத்திராகமம் 24:15-16 · யாத்திராகமம் 20:21 · யாத்திராகமம் 14:31 · மத்தேயு 17:5
10பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,
Relatedஎபிரெயர் 10:22 · ஆதியாகமம் 35:2 · லேவியராகமம் 11:44-45 · லேவியராகமம் 11:25 · லேவியராகமம் 15:5 · I கொரிந்தியர் 6:11
11மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
Relatedயாத்திராகமம் 19:16 · யாத்திராகமம் 34:5 · யோவான் 3:13 · உபாகமம் 33:2 · யோவான் 6:38 · சங்கீதம் 144:5
12ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
Relatedஎபிரெயர் 12:20-21 · யோசுவா 3:4 · யாத்திராகமம் 10:28 · யாத்திராகமம் 19:23 · உபாகமம் 2:4 · யாத்திராகமம் 34:12
13ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
RelatedI தெசலோனிக்கேயர் 4:16 · யாத்திராகமம் 19:16 · எபிரெயர் 12:20 · I கொரிந்தியர் 15:52 · லேவியராகமம் 20:15-16 · யாத்திராகமம் 19:19
14மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
Relatedயாத்திராகமம் 19:10
15அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
RelatedI கொரிந்தியர் 7:5 · I சாமுவேல் 21:4-5 · யாத்திராகமம் 19:11 · யோவேல் 2:16 · மத்தேயு 3:10-12 · சகரியா 6:3
16மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
Relatedஎபிரெயர் 12:18-19 · சங்கீதம் 18:11-14 · எபிரெயர் 12:21 · வெளிப்படுத்தின விசேஷம் 4:1 · சங்கீதம் 77:18 · வெளிப்படுத்தின விசேஷம் 11:19
17அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
Relatedநியாயாதிபதிகள் 5:5 · வெளிப்படுத்தின விசேஷம் 15:8 · யாத்திராகமம் 3:2 · சங்கீதம் 144:5 · சங்கீதம் 68:7-8 · ஆதியாகமம் 19:28
19எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
Relatedநெகேமியா 9:13 · யாத்திராகமம் 24:12-13 · யாத்திராகமம் 19:11 · யாத்திராகமம் 34:2 · சங்கீதம் 81:7 · யாத்திராகமம் 24:18
21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
RelatedI சாமுவேல் 6:19 · யாத்திராகமம் 3:5 · எபிரெயர் 12:28-29 · யாத்திராகமம் 19:12-13 · யாத்திராகமம் 3:3 · யாத்திராகமம் 33:20
22கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
Relatedயாத்திராகமம் 24:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:10 · யாத்திராகமம் 19:14-15 · லேவியராகமம் 10:1-3 · I நாளாகமம் 15:13 · I கொரிந்தியர் 11:30-32
23அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
24கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.
Relatedஎபிரெயர் 4:16 · எபிரெயர் 12:18-25 · எபிரெயர் 12:29 · ரோமர் 4:15 · யாத்திராகமம் 24:9 · யோவான் 1:17
25அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS