வெளிப்படுத்தின விசேஷம் 9
Tamil Bible (BSI 1957) • 21 verses
1ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 8:10 · ரோமர் 10:7 · வெளிப்படுத்தின விசேஷம் 9:2 · II தீமோத்தேயு 3:1-5 · வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · லூக்கா 8:31
2அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
Relatedயோவேல் 2:10 · ஆதியாகமம் 19:28 · யோவேல் 2:2 · யோவேல் 2:30 · ஏசாயா 14:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:19
3அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:5 · யோவேல் 1:4 · யோவேல் 2:25 · உபாகமம் 8:15 · I இராஜாக்கள் 12:11 · யாத்திராகமம் 10:4-15
4பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:2-4 · எசேக்கியேல் 9:4 · வெளிப்படுத்தின விசேஷம் 14:1 · யாத்திராகமம் 12:23 · எசேக்கியேல் 9:6 · வெளிப்படுத்தின விசேஷம் 8:7
5மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:10 · யோபு 2:6 · வெளிப்படுத்தின விசேஷம் 9:3 · வெளிப்படுத்தின விசேஷம் 13:7 · வெளிப்படுத்தின விசேஷம் 13:5 · தானியேல் 5:18-22
6அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.
Relatedலூக்கா 23:30 · எரேமியா 8:3 · வெளிப்படுத்தின விசேஷம் 6:16 · ஏசாயா 2:19 · ஓசியா 10:8 · யோபு 7:15-16
7அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
8அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
Relatedயோவேல் 1:6 · I பேதுரு 3:3 · I கொரிந்தியர் 11:14-15 · ஏசாயா 3:24 · சங்கீதம் 57:4 · II இராஜாக்கள் 9:30
9இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஒடுகிற அநேகங்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
Relatedயோவேல் 2:5-8 · யோபு 39:25 · வெளிப்படுத்தின விசேஷம் 9:17 · நாகூம் 2:4-5 · யோபு 40:18 · ஏசாயா 9:5
10அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
Relatedயோபு 26:6 · வெளிப்படுத்தின விசேஷம் 9:1-2 · II கொரிந்தியர் 4:4 · யோவான் 16:11 · எபேசியர் 2:2 · யோவான் 14:30
12முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 11:14 · வெளிப்படுத்தின விசேஷம் 8:13-9:2 · வெளிப்படுத்தின விசேஷம் 9:13-21
13ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 8:3-5 · யாத்திராகமம் 30:2-3 · வெளிப்படுத்தின விசேஷம் 9:1 · எபிரெயர் 9:24 · எபிரெயர் 10:21
14எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:12 · வெளிப்படுத்தின விசேஷம் 9:15 · ஆதியாகமம் 2:14 · II சாமுவேல் 8:3 · எரேமியா 51:63 · வெளிப்படுத்தின விசேஷம் 7:1
15அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:18 · வெளிப்படுத்தின விசேஷம் 8:7 · வெளிப்படுத்தின விசேஷம் 8:9 · வெளிப்படுத்தின விசேஷம் 9:10 · வெளிப்படுத்தின விசேஷம் 8:11-12 · வெளிப்படுத்தின விசேஷம் 9:5
16குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபதுகோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:4 · சங்கீதம் 68:17 · தானியேல் 7:10 · எசேக்கியேல் 38:4 · வெளிப்படுத்தின விசேஷம் 5:11 · தானியேல் 11:40
17குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:18 · I நாளாகமம் 12:8 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · சங்கீதம் 11:6
18அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.
19அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
20அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;
Relatedதானியேல் 5:23 · உபாகமம் 31:29 · ரோமர் 1:21-23 · I தீமோத்தேயு 4:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26 · வெளிப்படுத்தின விசேஷம் 9:21
21தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS