யாத்திராகமம் 33
Tamil Bible (BSI 1957) • 23 verses
1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
Relatedஆதியாகமம் 12:7 · யாத்திராகமம் 32:13 · ஆதியாகமம் 22:16-18 · ஆதியாகமம் 26:3 · யாத்திராகமம் 32:7 · ஆதியாகமம் 15:18
2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
Relatedயோசுவா 24:11 · யாத்திராகமம் 32:34 · யாத்திராகமம் 23:20 · யாத்திராகமம் 3:8 · யாத்திராகமம் 23:27-31 · உபாகமம் 7:22
3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
Relatedயாத்திராகமம் 32:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51 · உபாகமம் 9:6-13 · யாத்திராகமம் 3:8 · எரேமியா 11:5 · யாத்திராகமம் 33:15-17
4துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 14:39 · எண்ணாகமம் 14:1 · எசேக்கியேல் 26:16 · எசேக்கியேல் 24:23 · எசேக்கியேல் 24:17 · லேவியராகமம் 10:6
5ஏனென்றால், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
Relatedயாத்திராகமம் 33:3-4 · உபாகமம் 8:2 · எண்ணாகமம் 16:21 · சங்கீதம் 139:23 · எண்ணாகமம் 16:45-46 · யோபு 34:20
6ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
7மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
Relatedஏசாயா 55:6-7 · நீதிமொழிகள் 15:29 · ஏசாயா 59:2 · யாத்திராகமம் 29:42-43 · உபாகமம் 4:29 · II சாமுவேல் 21:1
8மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 16:27
9மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
Relatedசங்கீதம் 99:7 · ஆதியாகமம் 18:33 · எசேக்கியேல் 3:22 · யாத்திராகமம் 31:18 · ஆதியாகமம் 17:22 · எண்ணாகமம் 11:17
10ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
11ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
Relatedஎண்ணாகமம் 12:8 · உபாகமம் 34:10 · யாத்திராகமம் 24:13 · யாத்திராகமம் 33:9 · உபாகமம் 5:4 · ஆதியாகமம் 32:30
12மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;
Relatedயாத்திராகமம் 33:17 · யோவான் 10:14-15 · எரேமியா 1:5 · யாத்திராகமம் 32:34 · II தீமோத்தேயு 2:19 · ஏசாயா 43:1
13உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.
Relatedசங்கீதம் 119:33 · சங்கீதம் 25:4 · சங்கீதம் 27:11 · சங்கீதம் 86:11 · எபேசியர் 1:17 · ஏசாயா 30:21
14அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
15அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
16எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
Relatedஉபாகமம் 4:7 · எண்ணாகமம் 14:14 · மத்தேயு 1:23 · I இராஜாக்கள் 8:53 · யாத்திராகமம் 34:10 · யாத்திராகமம் 19:5-6
17அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
Relatedஏசாயா 65:24 · I யோவான் 5:14-15 · யாத்திராகமம் 33:12 · ஆதியாகமம் 19:21 · ஆதியாகமம் 6:8 · யோவான் 16:23
18அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:23 · தீத்து 2:13 · யாத்திராகமம் 33:20 · I தீமோத்தேயு 6:16 · II கொரிந்தியர் 4:6 · யோவான் 1:18
19அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
Relatedரோமர் 9:15-18 · எபேசியர் 1:6-8 · எரேமியா 31:14 · எரேமியா 31:12 · ஏசாயா 7:14 · யாத்திராகமம் 34:5-7
20நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
Relatedயோவான் 1:18 · ஆதியாகமம் 32:30 · I தீமோத்தேயு 6:16 · ஏசாயா 6:5 · நியாயாதிபதிகள் 6:22 · நியாயாதிபதிகள் 13:22
21பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
22என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
23பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
Relatedயோவான் 1:18 · யாத்திராகமம் 33:20 · I கொரிந்தியர் 13:12 · யோபு 11:7 · I தீமோத்தேயு 6:16 · யோபு 26:14
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS