யோபு 18
Tamil Bible (BSI 1957) • 21 verses
1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
4கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
Relatedநீதிமொழிகள் 13:9 · நீதிமொழிகள் 24:20 · நீதிமொழிகள் 20:20 · யோபு 21:17 · நீதிமொழிகள் 4:19 · ஏசாயா 50:11
6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
Relatedசங்கீதம் 9:15 · யோபு 22:10 · சங்கீதம் 35:8 · நீதிமொழிகள் 5:22 · I தீமோத்தேயு 3:7 · நீதிமொழிகள் 29:6
9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
12அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
Relatedசங்கீதம் 34:10 · I தெசலோனிக்கேயர் 5:3 · சங்கீதம் 7:12-14 · II பேதுரு 2:3 · யோபு 15:23-24 · I சாமுவேல் 2:5
13அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
Relatedஆதியாகமம் 49:3 · சகரியா 14:12 · ஏசாயா 14:30 · யோனா 2:6 · யோபு 17:16 · வெளிப்படுத்தின விசேஷம் 6:8
14அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
Relatedநீதிமொழிகள் 10:28 · எபிரெயர் 2:15 · யோபு 41:34 · நீதிமொழிகள் 14:32 · சங்கீதம் 112:10 · யோபு 8:14
15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
Relatedசங்கீதம் 11:6 · உபாகமம் 29:23 · ஏசாயா 34:9-10 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · யோபு 20:18-21 · சகரியா 5:4
16கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
17அவனை நினைக்கும் நினைப்புப் பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.
Relatedசங்கீதம் 34:16 · நீதிமொழிகள் 10:7 · சங்கீதம் 109:13 · நீதிமொழிகள் 2:22 · யோபு 13:12 · சங்கீதம் 83:4
18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
19அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
20அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.
Relatedசங்கீதம் 37:13 · எசேக்கியேல் 21:25 · எரேமியா 50:27 · சங்கீதம் 137:7 · லூக்கா 19:42 · ஒபதியா 1:11-15
21அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS