ஏசாயா 20
Tamil Bible (BSI 1957) • 6 verses
1தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
RelatedII இராஜாக்கள் 18:17 · ஆமோஸ் 1:8 · I சாமுவேல் 6:17 · I சாமுவேல் 5:1 · எரேமியா 25:29-30 · எரேமியா 25:20
2கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
Relatedமீகா 1:8 · I சாமுவேல் 19:24 · மத்தேயு 3:4 · எசேக்கியேல் 24:17 · சகரியா 13:4 · எசேக்கியேல் 24:23
3அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,
Relatedஏசாயா 8:18 · ஏசாயா 43:3 · ஏசாயா 18:1-7 · எசேக்கியேல் 4:5-6 · வெளிப்படுத்தின விசேஷம் 11:2-3 · எண்ணாகமம் 14:34
4அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
Relatedஏசாயா 19:4 · எரேமியா 13:26 · எரேமியா 13:22 · ஏசாயா 3:17 · II சாமுவேல் 10:4 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18
5அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
Relatedஏசாயா 30:3 · ஏசாயா 30:5 · II இராஜாக்கள் 18:21 · எரேமியா 17:5 · எசேக்கியேல் 29:6-7 · I கொரிந்தியர் 3:21
6இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS