ஏசாயா 15
Tamil Bible (BSI 1957) • 9 verses
1மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
Relatedஆமோஸ் 2:1-3 · எரேமியா 48:1-47 · எசேக்கியேல் 25:8-11 · எண்ணாகமம் 21:28 · ஏசாயா 11:14 · ஏசாயா 16:7
2அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
Relatedஎரேமியா 48:1 · லேவியராகமம் 21:5 · எண்ணாகமம் 21:30 · உபாகமம் 34:1 · எரேமியா 47:5 · எரேமியா 48:18
3அதின் வீதிகளில் இரட்டைக் கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
4எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.
Relatedஎரேமியா 48:34 · எண்ணாகமம் 21:23 · யோனா 4:3 · எண்ணாகமம் 32:3-4 · யோபு 3:20-22 · ஆதியாகமம் 27:46
5என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
Relatedஎரேமியா 48:5 · எரேமியா 4:20 · லூக்கா 19:41-44 · எரேமியா 48:31-36 · எரேமியா 13:17 · ஆதியாகமம் 19:22
6நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற் போகிறது.
Relatedஎண்ணாகமம் 32:36 · யோவேல் 1:10-12 · ஏசாயா 19:5-7 · ஆபகூக் 3:17-18 · ஏசாயா 16:9-10 · யோசுவா 13:27
7ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
8கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.
9தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக்கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS