சகரியா 14
Tamil Bible (BSI 1957) • 21 verses
1இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
Relatedஏசாயா 13:9 · வெளிப்படுத்தின விசேஷம் 16:14 · ஏசாயா 2:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:20 · ஏசாயா 13:6 · மல்கியா 4:1
2எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
Relatedலூக்கா 21:20-24 · ஏசாயா 13:16 · ரோமர் 9:27-29 · மத்தேயு 24:19-22 · மாற்கு 13:14 · மத்தேயு 24:15-16
3கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
Relatedசகரியா 12:9 · சகரியா 2:8-9 · செப்பனியா 3:19 · யோவேல் 3:9-17 · யோவேல் 3:2 · யாத்திராகமம் 15:1-6
4அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
Relatedமீகா 1:3-4 · எசேக்கியேல் 11:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:11-12 · சகரியா 14:10 · யோவேல் 3:12-14 · சகரியா 14:7
5அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
6அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
Relatedசங்கீதம் 112:4 · சங்கீதம் 97:10-11 · யோவான் 12:46 · II பேதுரு 1:19 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · நீதிமொழிகள் 4:18-19
7ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:5 · தானியேல் 12:4 · I தெசலோனிக்கேயர் 5:2 · வெளிப்படுத்தின விசேஷம் 21:23 · ஏசாயா 30:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31
8அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:1-2 · யோவான் 7:38 · யோவான் 4:14 · யோவான் 4:10 · வெளிப்படுத்தின விசேஷம் 7:16-17 · யோவேல் 3:18
9அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
Relatedஎபேசியர் 4:5-6 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · தானியேல் 7:27 · உபாகமம் 6:4 · ஏசாயா 2:2-4 · செப்பனியா 3:9
10தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
Relatedயோசுவா 15:32 · சகரியா 12:6 · எரேமியா 37:13 · I இராஜாக்கள் 15:22 · எரேமியா 30:18 · நியாயாதிபதிகள் 20:47
11அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:3 · ஆமோஸ் 9:15 · எரேமியா 23:5-6 · சகரியா 8:8 · வெளிப்படுத்தின விசேஷம் 21:4 · ஏசாயா 60:18
12எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
Relatedஎசேக்கியேல் 39:17-20 · ஏசாயா 66:15-16 · மீகா 4:11-13 · சங்கீதம் 110:5-6 · சங்கீதம் 90:11 · சகரியா 12:9
13அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
Relatedசகரியா 12:4 · எசேக்கியேல் 38:21 · நியாயாதிபதிகள் 7:22 · வெளிப்படுத்தின விசேஷம் 17:12-17 · II நாளாகமம் 20:22-24 · சகரியா 11:6
14யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
Relatedஏசாயா 23:18 · சகரியா 12:2 · சகரியா 12:5-7 · சகரியா 10:4-5 · II நாளாகமம் 14:13-15 · II இராஜாக்கள் 7:6-18
15அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.
Relatedசகரியா 14:12
16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
Relatedஏசாயா 60:12 · எரேமியா 14:4 · ஆமோஸ் 4:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 11:6 · யாக்கோபு 5:17 · உபாகமம் 11:17
18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும்.
19இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
Relatedயோவான் 3:19
20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
RelatedI கொரிந்தியர் 3:16-17 · யாத்திராகமம் 39:30 · I பேதுரு 2:5 · ஏசாயா 23:18 · லேவியராகமம் 8:9 · எண்ணாகமம் 4:7
21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
📖 சகரியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS