சகரியா 3
Tamil Bible (BSI 1957) • 10 verses
1அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
Relatedலூக்கா 22:31 · I பேதுரு 5:8 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9-10 · யோபு 2:1-8 · சங்கீதம் 109:6 · யோபு 1:6-12
2அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
3யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
Relatedஏசாயா 64:6 · எஸ்றா 9:15 · வெளிப்படுத்தின விசேஷம் 19:8 · வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14 · மத்தேயு 22:11-13 · தானியேல் 9:18
4அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
Relatedஏசாயா 61:10 · லூக்கா 15:22 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · எசேக்கியேல் 36:25 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8 · ஏசாயா 43:25
5அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.
Relatedசகரியா 6:11 · யாத்திராகமம் 29:6 · யோபு 29:14 · வெளிப்படுத்தின விசேஷம் 4:4 · லேவியராகமம் 8:6-9 · யாத்திராகமம் 28:2-4
6கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
Relatedஎரேமியா 11:7 · யாத்திராகமம் 23:20-21 · ஆதியாகமம் 28:13-17 · ஆதியாகமம் 22:15-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:35-38 · ஆதியாகமம் 48:15-16
7சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
Relatedமத்தேயு 19:28 · II தீமோத்தேயு 4:1-2 · எசேக்கியேல் 44:15-16 · ஆதியாகமம் 26:5 · I தீமோத்தேயு 6:13-14 · லேவியராகமம் 8:35
8இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedசகரியா 4:10 · எரேமியா 50:20 · வெளிப்படுத்தின விசேஷம் 5:6 · ஏசாயா 28:16 · எரேமியா 31:34 · சங்கீதம் 118:22
10அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
📖 சகரியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS