லேவியராகமம் 23
Tamil Bible (BSI 1957) • 44 verses
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
Relatedலேவியராகமம் 23:4 · லேவியராகமம் 23:37 · எண்ணாகமம் 29:39 · எண்ணாகமம் 10:10 · யாத்திராகமம் 23:14-17 · ஓசியா 2:11
3ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
Relatedலேவியராகமம் 19:3 · யாத்திராகமம் 35:2-3 · யாத்திராகமம் 23:12 · யாத்திராகமம் 20:8-11 · யாத்திராகமம் 34:21 · லூக்கா 13:14
4சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
5முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
Relatedஉபாகமம் 16:1-8 · யோசுவா 5:10 · எண்ணாகமம் 28:16-17 · யாத்திராகமம் 12:2-14 · யாத்திராகமம் 12:18-19 · யாத்திராகமம் 13:3-10
6அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
Relatedயாத்திராகமம் 34:18 · உபாகமம் 16:8 · யாத்திராகமம் 12:15-16 · யாத்திராகமம் 13:6-7 · எண்ணாகமம் 28:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:3-4
7முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Relatedலேவியராகமம் 23:8 · எண்ணாகமம் 28:18-25 · லேவியராகமம் 23:35-36 · லேவியராகமம் 23:25 · லேவியராகமம் 23:21
8ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
9பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
10நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
Relatedயாத்திராகமம் 34:26 · யாத்திராகமம் 23:19 · எண்ணாகமம் 28:26 · எண்ணாகமம் 15:18-21 · வெளிப்படுத்தின விசேஷம் 14:4 · I கொரிந்தியர் 15:20-23
11உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
12நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
13கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
Relatedலேவியராகமம் 2:14-16 · லேவியராகமம் 6:20 · லேவியராகமம் 14:10 · எண்ணாகமம் 28:10 · யாத்திராகமம் 30:9 · யாத்திராகமம் 30:24
14உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Relatedயாத்திராகமம் 34:26 · ஆதியாகமம் 4:4-5 · எண்ணாகமம் 15:20-21 · நெகேமியா 9:14 · உபாகமம் 16:12 · லேவியராகமம் 10:11
15நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
Relatedலேவியராகமம் 23:10-11 · லேவியராகமம் 25:8 · யாத்திராகமம் 34:22 · உபாகமம் 16:9-10 · எண்ணாகமம் 28:26
16ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
17நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
Relatedலேவியராகமம் 23:10 · லேவியராகமம் 7:13 · யாத்திராகமம் 34:22 · யாத்திராகமம் 34:26 · யாத்திராகமம் 23:19 · எண்ணாகமம் 28:26
18அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலியையும் செலுத்தி,
19வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.
Relatedஎண்ணாகமம் 28:30 · எண்ணாகமம் 15:24 · ரோமர் 8:3 · லேவியராகமம் 16:15 · II கொரிந்தியர் 5:21 · லேவியராகமம் 3:1-17
20அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
Relatedஉபாகமம் 18:4 · லேவியராகமம் 10:14-15 · I கொரிந்தியர் 9:11 · லூக்கா 2:14 · லேவியராகமம் 7:29-34 · லேவியராகமம் 8:29
21அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Relatedலேவியராகமம் 23:2 · லேவியராகமம் 23:4 · லேவியராகமம் 23:14 · ஆதியாகமம் 17:7 · எண்ணாகமம் 18:23 · ஏசாயா 11:10
22உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Relatedலேவியராகமம் 19:9-10 · உபாகமம் 24:19-21 · ஏசாயா 58:10 · நீதிமொழிகள் 11:24-25 · ரூத் 2:15-23 · II கொரிந்தியர் 9:5-12
23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
RelatedI கொரிந்தியர் 15:52 · I தெசலோனிக்கேயர் 4:16 · எண்ணாகமம் 29:1-6 · லேவியராகமம் 25:9 · எண்ணாகமம் 10:9-10 · சங்கீதம் 98:6
25அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
Relatedலேவியராகமம் 23:21
26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
Relatedலேவியராகமம் 16:29-31 · எண்ணாகமம் 29:7-11 · லேவியராகமம் 16:24 · யாத்திராகமம் 30:10 · ஏசாயா 58:5 · லேவியராகமம் 16:15
28அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
29அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Relatedஆதியாகமம் 17:14 · எண்ணாகமம் 5:2 · லேவியராகமம் 23:32 · லேவியராகமம் 23:27 · எரேமியா 31:9 · எசேக்கியேல் 7:16
30அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
Relatedலேவியராகமம் 20:3 · லேவியராகமம் 20:5-6 · செப்பனியா 2:5 · I கொரிந்தியர் 3:17 · எரேமியா 15:7 · ஆதியாகமம் 17:14
31அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.
32அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
Relatedமத்தேயு 11:28-30 · சங்கீதம் 51:17 · சங்கீதம் 35:13 · சங்கீதம் 69:10-11 · லேவியராகமம் 23:27 · லேவியராகமம் 16:31
33பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
Relatedயோவான் 7:2 · நெகேமியா 8:14 · எண்ணாகமம் 29:12 · எஸ்றா 3:4 · சகரியா 14:16-19 · யாத்திராகமம் 34:22
35முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Relatedநெகேமியா 8:18 · யோவான் 7:37 · எண்ணாகமம் 29:12-38 · II நாளாகமம் 7:8-11 · உபாகமம் 16:8 · யோவேல் 1:14
37நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
38நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
Relatedஎண்ணாகமம் 29:39 · எஸ்றா 2:68-69 · லேவியராகமம் 19:3 · I நாளாகமம் 29:3-8 · உபாகமம் 12:6 · லேவியராகமம் 23:3
39நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
Relatedயாத்திராகமம் 23:16 · உபாகமம் 16:13 · லேவியராகமம் 23:34 · லேவியராகமம் 23:36 · லேவியராகமம் 23:24
40முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:9 · பிலிப்பியர் 4:4 · மத்தேயு 21:8 · உபாகமம் 16:14-15 · யோவான் 12:13 · ரோமர் 5:11
41வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
42நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
Relatedநெகேமியா 8:14-17 · ஆதியாகமம் 33:17 · எரேமியா 35:10 · எண்ணாகமம் 24:2 · எபிரெயர் 11:13-16 · எண்ணாகமம் 24:5
43ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
44அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS