லேவியராகமம் 10
Tamil Bible (BSI 1957) • 20 verses
1பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 26:61 · உபாகமம் 12:32 · லேவியராகமம் 16:12 · எண்ணாகமம் 16:46 · யாத்திராகமம் 6:23 · யாத்திராகமம் 24:1
2அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 26:61 · லேவியராகமம் 9:24 · எண்ணாகமம் 16:35 · எண்ணாகமம் 3:3-4 · II சாமுவேல் 6:7 · லேவியராகமம் 16:1
3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
Relatedயாத்திராகமம் 19:22 · ஏசாயா 49:3 · லேவியராகமம் 21:6 · எண்ணாகமம் 20:12 · I சாமுவேல் 2:30 · ஏசாயா 52:11
4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
Relatedயாத்திராகமம் 6:22 · யாத்திராகமம் 6:18 · எண்ணாகமம் 3:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:9-10 · எண்ணாகமம் 3:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:6
5மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
Relatedலேவியராகமம் 8:13
6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
Relatedயோசுவா 22:18 · எண்ணாகமம் 16:22 · யோசுவா 7:1 · எண்ணாகமம் 1:53 · II சாமுவேல் 24:1 · லேவியராகமம் 13:45
7நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
Relatedலேவியராகமம் 21:12 · II கொரிந்தியர் 1:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · லேவியராகமம் 8:30 · யாத்திராகமம் 28:41 · லேவியராகமம் 8:12
8கர்த்தர் ஆரோனை நோக்கி:
9நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் பண்ணும்படிக்கும்,
Relatedஎசேக்கியேல் 22:26 · I பேதுரு 1:14-16 · லேவியராகமம் 11:47 · எசேக்கியேல் 44:23 · தீத்து 1:15 · லேவியராகமம் 20:25-26
11கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
12மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
Relatedலேவியராகமம் 21:22 · எண்ணாகமம் 18:9-10 · எசேக்கியேல் 44:29 · யாத்திராகமம் 29:2 · லேவியராகமம் 6:14-18 · லேவியராகமம் 2:1-16
13அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன்.
14அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Relatedஎண்ணாகமம் 18:11 · லேவியராகமம் 7:29-34 · யாத்திராகமம் 29:24-28 · யோவான் 4:34 · லேவியராகமம் 9:21
15கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
Relatedலேவியராகமம் 7:34 · ஆதியாகமம் 17:8 · ஆதியாகமம் 17:17 · லேவியராகமம் 7:29-30 · I கொரிந்தியர் 9:13-14 · ஆதியாகமம் 13:15
16பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:
Relatedலேவியராகமம் 9:3 · லேவியராகமம் 9:15 · எண்ணாகமம் 12:3 · யாத்திராகமம் 32:19-22 · மத்தேயு 5:22 · லேவியராகமம் 6:26
17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே.
Relatedலேவியராகமம் 6:24-30 · யாத்திராகமம் 28:38 · எண்ணாகமம் 18:1 · லேவியராகமம் 7:6-7 · எபிரெயர் 9:28 · லேவியராகமம் 22:16
18அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
19அப்பொழுது ஆரோன் மோசையை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
Relatedலேவியராகமம் 9:12 · லேவியராகமம் 9:8 · மல்கியா 1:10 · எரேமியா 14:12 · ஏசாயா 1:15 · எரேமியா 6:20
20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS