யாத்திராகமம் 11
Tamil Bible (BSI 1957) • 10 verses
1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
Relatedஆதியாகமம் 15:14 · லேவியராகமம் 26:21 · யாத்திராகமம் 3:20 · யாத்திராகமம் 9:14 · வெளிப்படுத்தின விசேஷம் 16:9 · உபாகமம் 4:34
2இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.
Relatedயாத்திராகமம் 3:22 · யாத்திராகமம் 12:35-36 · ஆகாய் 2:8 · சங்கீதம் 105:37 · நீதிமொழிகள் 13:22 · மத்தேயு 20:15
3அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.
Relatedயாத்திராகமம் 12:36 · யாத்திராகமம் 3:21 · ஏசாயா 60:14 · வெளிப்படுத்தின விசேஷம் 3:9 · சங்கீதம் 106:46 · ஆதியாகமம் 39:21
4அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன்.
Relatedயாத்திராகமம் 12:29 · ஆமோஸ் 4:10 · சங்கீதம் 60:10 · யோபு 34:20 · யாத்திராகமம் 12:12 · II சாமுவேல் 5:24
5அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,
Relatedசங்கீதம் 78:51 · மத்தேயு 24:41 · சங்கீதம் 105:36 · சங்கீதம் 135:8 · யாத்திராகமம் 13:15 · யாத்திராகமம் 4:23
6அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
Relatedயாத்திராகமம் 12:30 · ஆமோஸ் 5:17 · நீதிமொழிகள் 21:13 · யாத்திராகமம் 3:7 · லூக்கா 13:28 · செப்பனியா 1:10
7ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
Relatedயோசுவா 10:21 · யாத்திராகமம் 8:22 · மல்கியா 3:18 · யாத்திராகமம் 10:23 · யாத்திராகமம் 9:4 · யோபு 5:16
8அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
Relatedயாத்திராகமம் 12:31-33 · எசேக்கியேல் 3:14 · தானியேல் 3:19 · உபாகமம் 32:24 · I இராஜாக்கள் 20:10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:9
9கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.
10மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
Relatedயாத்திராகமம் 4:21 · யாத்திராகமம் 10:27 · யாத்திராகமம் 10:20 · உபாகமம் 2:30 · ரோமர் 2:4-5 · ரோமர் 9:22
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS