லேவியராகமம் 24
Tamil Bible (BSI 1957) • 23 verses
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
RelatedII கொரிந்தியர் 4:6 · எபேசியர் 5:8-14 · யாத்திராகமம் 27:20-21 · யோவான் 8:12 · பிலிப்பியர் 2:15-16 · எபேசியர் 1:17-18
3ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.
4அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.
Relatedயாத்திராகமம் 31:8 · யாத்திராகமம் 37:17-24 · யாத்திராகமம் 39:37 · யாத்திராகமம் 25:31-39 · I இராஜாக்கள் 7:49 · எபிரெயர் 9:2
5அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
Relatedயாத்திராகமம் 25:30 · I சாமுவேல் 21:4-5 · யாத்திராகமம் 40:23 · I இராஜாக்கள் 18:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 · மத்தேயு 12:4
6அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
RelatedI இராஜாக்கள் 7:48 · யாத்திராகமம் 25:23-24 · II நாளாகமம் 13:11 · எபிரெயர் 9:2 · யாத்திராகமம் 37:10-16 · II நாளாகமம் 4:19
7ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.
Relatedலேவியராகமம் 2:2 · வெளிப்படுத்தின விசேஷம் 8:3-4 · யாத்திராகமம் 12:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4 · யோவான் 6:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31
8அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
RelatedII நாளாகமம் 2:4 · எண்ணாகமம் 4:7 · I நாளாகமம் 9:32 · நெகேமியா 10:33 · I நாளாகமம் 23:29 · மத்தேயு 12:3-5
9அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்தியகட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
Relatedலேவியராகமம் 8:31 · லூக்கா 6:4 · மத்தேயு 12:4 · மாற்கு 2:26 · லேவியராகமம் 10:17 · லேவியராகமம் 6:16
10அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
11அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.
Relatedயாத்திராகமம் 20:7 · யாத்திராகமம் 3:15 · யாத்திராகமம் 18:22 · லேவியராகமம் 24:15-16 · ஏசாயா 8:21 · யோபு 2:5
12கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
Relatedயாத்திராகமம் 18:15-16 · எண்ணாகமம் 36:5-6 · எண்ணாகமம் 15:34 · எண்ணாகமம் 27:5 · யாத்திராகமம் 18:23
13அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
14தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
Relatedஉபாகமம் 17:7 · உபாகமம் 21:21 · லேவியராகமம் 20:27 · யோவான் 10:31-33 · லேவியராகமம் 20:2 · உபாகமம் 22:21
15மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
16கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Relatedமத்தேயு 12:31 · யாக்கோபு 2:7 · யோவான் 10:33-36 · I தீமோத்தேயு 1:13 · மாற்கு 3:28-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:11
17ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Relatedஆதியாகமம் 9:5-6 · உபாகமம் 19:11-12 · எண்ணாகமம் 35:30-31 · உபாகமம் 27:24 · யாத்திராகமம் 21:12-14
18மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
20நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
21மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
22உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Relatedயாத்திராகமம் 12:49 · எண்ணாகமம் 15:15-16 · எண்ணாகமம் 9:14 · எண்ணாகமம் 15:29 · லேவியராகமம் 19:34 · லேவியராகமம் 17:10
23அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
📖 லேவியராகமம்All 27 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS