எசேக்கியேல் 1
Tamil Bible (BSI 1957) • 28 verses
1முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:56 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11 · எசேக்கியேல் 11:24 · மத்தேயு 3:16 · வெளிப்படுத்தின விசேஷம் 4:1 · எசேக்கியேல் 10:20
2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
RelatedII இராஜாக்கள் 24:12-15 · எசேக்கியேல் 8:1 · எசேக்கியேல் 40:1 · எசேக்கியேல் 20:1 · எசேக்கியேல் 29:17 · எசேக்கியேல் 29:1
3அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
Relatedஎசேக்கியேல் 3:22 · எசேக்கியேல் 3:14 · I இராஜாக்கள் 18:46 · II இராஜாக்கள் 3:15 · எசேக்கியேல் 37:1 · எசேக்கியேல் 33:22
4இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
Relatedஎசேக்கியேல் 1:27 · எசேக்கியேல் 8:2 · எரேமியா 23:19 · எரேமியா 1:13-14 · எரேமியா 25:32 · ஏசாயா 21:1
5அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது.
6அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
Relatedஎசேக்கியேல் 10:14 · எசேக்கியேல் 10:21-22 · எசேக்கியேல் 10:10 · I இராஜாக்கள் 6:24-27 · ஏசாயா 6:2 · வெளிப்படுத்தின விசேஷம் 4:7-8
7அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:15 · தானியேல் 10:6 · சங்கீதம் 104:4 · எசேக்கியேல் 1:13 · லேவியராகமம் 11:47 · லேவியராகமம் 11:3
8அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
Relatedஎசேக்கியேல் 10:21 · எசேக்கியேல் 10:18 · எசேக்கியேல் 1:17 · எசேக்கியேல் 10:7-8 · எசேக்கியேல் 10:2 · ஏசாயா 6:6
9அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
Relatedஎசேக்கியேல் 10:22 · லூக்கா 9:51 · I கொரிந்தியர் 1:10 · எசேக்கியேல் 10:11 · லூக்கா 9:62 · நீதிமொழிகள் 4:25-27
10அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நாலும் எருதுமுகமும் கழுகுமுகமுமாயிருந்தன.
Relatedஎசேக்கியேல் 10:14 · வெளிப்படுத்தின விசேஷம் 4:7 · I கொரிந்தியர் 9:9-10 · எண்ணாகமம் 2:18 · எண்ணாகமம் 2:10 · I கொரிந்தியர் 14:20
11அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
12அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
Relatedசங்கீதம் 104:4 · வெளிப்படுத்தின விசேஷம் 4:5 · ஆதியாகமம் 15:17 · மத்தேயு 28:3 · வெளிப்படுத்தின விசேஷம் 18:1 · தானியேல் 10:5-6
14அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
Relatedதானியேல் 7:9 · எசேக்கியேல் 10:9 · எசேக்கியேல் 1:6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:7 · எசேக்கியேல் 1:19-21 · எசேக்கியேல் 10:13-17
16சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
Relatedதானியேல் 10:6 · எசேக்கியேல் 10:9-11 · யாத்திராகமம் 39:13 · சங்கீதம் 40:5 · எபேசியர் 3:10 · சங்கீதம் 36:6
17அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
18அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
Relatedஎசேக்கியேல் 10:12 · வெளிப்படுத்தின விசேஷம் 4:6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:8 · யோபு 37:22-24 · நீதிமொழிகள் 15:3 · ஏசாயா 55:9
19அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
20ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
22ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
Relatedஎசேக்கியேல் 10:1 · எசேக்கியேல் 1:26 · வெளிப்படுத்தின விசேஷம் 4:6 · யோபு 37:22 · வெளிப்படுத்தின விசேஷம் 21:11 · யாத்திராகமம் 24:10
23மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
24அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம் போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
Relatedஎசேக்கியேல் 43:2 · தானியேல் 10:6 · சங்கீதம் 29:3-9 · வெளிப்படுத்தின விசேஷம் 1:15 · வெளிப்படுத்தின விசேஷம் 19:6 · சங்கீதம் 68:33
25அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
Relatedஎசேக்கியேல் 1:22
26அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
Relatedஎசேக்கியேல் 10:1 · யாத்திராகமம் 24:10 · வெளிப்படுத்தின விசேஷம் 1:13 · தானியேல் 10:18 · எசேக்கியேல் 1:22 · வெளிப்படுத்தின விசேஷம் 20:11
27அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
Relatedஎசேக்கியேல் 1:4 · எசேக்கியேல் 8:2 · எபிரெயர் 12:29 · சங்கீதம் 97:2 · உபாகமம் 4:24 · சங்கீதம் 50:3
28மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்;
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS